ஆன்லைனில் அறிமுகமான நபரை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி தோட்டத்தில் புதைத்த ஜெர்மனியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு 8 வருடம் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து பெர்லின் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் அவர் மீதான நர மாமிசம் சாப்பிட்டதற்கான குற்றச்சாட்டு நிரபிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரமும் கிடைக்கவில்லை. அந்த நபரின் பெயர் டெட்லெவ் க்யூன்செல் (57). முன்னாள் போலீஸ் அதிகாரியான இவர் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம், தனக்கு ஆன்லைன் மூலம் அறிமுகமான ஸ்டெம்ப்னிவிஸ் என்ற வர்த்தக ஆலோசகரை செக் நாட்டு எல்லையில் உள்ள மலைவாசஸ்தலப் பகுதிக்கு அழைத்தார்.
அங்கு வைத்து அவருக்கு விருந்தளித்தார். ஸ்டெம்பனிவிஸ் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். பின்னர் ஸ்டெப்ம்னிவிஸை அவர் கொலை செய்து. அதன் பிறகு அவரது உடலை துண்டு துண்டாக நறுக்கி தனது வீட்டுக்குக் கொண்டு வந்து தோட்டத்தில் புதைத்து விட்டார். இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில் போலீஸார் க்யூன்செலைக் கைது செய்தனர். அவர் மீது டிரெட்சன் நகர் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையில் அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்ட்டது. இருப்பினும் நர மாமிசம் சாப்பிட்டதற்கான ஆதாரம் போலீஸாரிடம் இல்லை. இந்த வழக்கி் கியூன்செல்லுக்கு கோர்ட் 8 ஆண்டு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. முன்னதாக கியூன்செல்லுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று கொலையானவரின் உறவினர்கள் கோர்ட்டுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். ஜெர்மனியில் கொலை வழக்குக்கு அதிகபட்ச தண்டனை அதுதான். இருப்பினும் கோர்ட் கிட்டத்தட்ட அதில் பாதிக்கு மேலான ஆண்டுகளே டெட்லெவ்-க்கு தண்டனையாக அளித்தது.
0 comments:
Post a Comment