ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஐ’ என்ற பிரமாண்டமான திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்காக நடிகர் விக்ரம் தனது உடலை வருத்தி நான்கு வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
பாடிபில்டர், ஸ்டைலான தோற்றம், மிருகம் போன்ற தோற்றம், அருவருக்கத்தக்க முகத்துடன் ஒரு தோற்றம் என நான்கு வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ள விக்ரம், நான்காவது தோற்றமான அருவருக்கத்தக்க தோற்றத்தில் நடிப்பதற்காக ஷங்கரின் கட்டாயத்தின் பேரில் விக்ரம் உடல் எடையை குறைத்ததாக செய்திகள் வெளியாகி வந்தன.
இதற்கு ஷங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ள ஷங்கர், “அருவருக்கத்தக்க முகத்துடன் கூடிய தோற்றத்தில் நடிப்பதற்காக முதலில் விக்ரமை நான் அணுகும்போது, மேக்கப் மட்டும் இருந்தால்போதும் என்றுதான் கூறினேன். ஆனால், விக்ரம்தான் இந்த கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையை குறைப்பதாகவும், அவ்வாறு குறைத்தால் அந்த கேரக்டர் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார்.
நானும் யோசித்துவிட்டு அவரிடம் சென்று எனக்கு உங்களுடைய உடல் நிலைதான் முக்கியம். உடம்பை குறைப்பதில் உங்களுக்கு சிரமம் இல்லையென்றால் எனக்கு திருப்திதான் என்று கூறினேன். அவரும், டாக்டர்கள் மற்றும் டயட்டீசியன் ஆகியோரிடம் ஆலோசனை கேட்டு தனது உடல் எடையை குறைத்தார். விக்ரமின் இந்த புதிய முயற்சி அவருடைய தொழில் பக்தியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது,’ என்று ஷங்கர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment