↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கடந்த 2012ஆம் ஆண்டு சூடானில் இருந்து பிரிந்து சென்ற தெற்கு சூடான் என்ற புதிய உதயமானது. ஆனால் புதிய நாடு உருவான நாஇல் இருந்து அங்கு உள்நாட்டு போர் ஏற்பட்டு அங்குள்ள மக்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர்.
இதுவரை ஆயிரத்திற்கும்மேற்பட்டோர் உயிரிழந்தும் கூட தெற்கு சூடானில் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தொடர் போரால் அந்நாட்டில் ஏராளமான பெண்கள் விதவைகளாக மாறி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்களுடைய குழந்தைகளும் அனாதையாகி சிரமப்படுகின்றன.
இந்நிலையில் உள்நாட்டு போரை நிறுத்தும் படி பெண்கள் போராட்டக் குழு அமைப்பு ஒன்று சமீபத்தில் கூடி, ஒரு வித்தியாசமான முடிவை எடுத்துள்ளன. இந்த முடிவின்படி போருக்கு செல்லும் கணவர்மார்களுடன் செக்ஸ் உறவு கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.
உள்நாட்டு போரை நிற்கும் வரை தங்கள் கணவர் மார்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில்லை என தெற்கு சூடான் பெண்கள் திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் அங்குள்ள ஆண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புதிய ஸ்டிரைக் முறைக்கு நாடு முழுவதும் உள்ள பெண்கள் ஆதரவு கொடுத்துள்ளதால் அந்நாட்டில் விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment