இதை படிக்கமுதல் இந்த செய்தியையும் படித்துவிட்டு வாருங்கள்
முருகதாசின் கத்தி வசூல் கணக்கு : விஜய் பட பித்தலாட்ட வரலாற்றின் அடுத்தகட்ட பரிமாண வளர்ச்சியாக இயக்குனரே களத்தில் இறங்கி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஆய்வாளரான சிறீதர் பிள்ளை அவர்கள் இன்று வெளியிட்ட டுவீட்டர் செய்தியின்படி "கத்தி" படத்தின் முதல் ஐந்துநாள் தமிழக கலக்சன் 36 கோடிகள் என்று பதிவிட்டிருந்தார். ஆனா, 2011 இல் வெளிவந்து சக்கைப்போடு போட்ட அஜித்தின் மங்காத்தா
முதல் ஐந்து நாட்களில் 25.9 கோடிகளை வசூலிச்சதாக மங்காத்தா வந்த சமயம் பதிவிட்டிருந்தார். (சிறீதர் பிள்ளை பொதுவாக விஜய் அனுதாபி என்று சொல்லப்படுபவர். சுறா வந்த சமயம் பிளாக்பஸ்டர் ஹிட் என்று சொல்லியவர், அதேவேள வீரம்(ஹிட்) VS ஜில்லா(அவரேஜ்) கலக்சனின் போது வீரத்துக்கு பின்னால் NECT TO NECT ஆக ஜில்லா இருக்கென்று அடிக்கடி பதிவிட்டவர்.)
இதில் குறிப்பிட்டவேண்டிய விடயம் என்னவெனில் கத்திக்கு U செர்டிப்பிக்கட்(வரி இல்லை). ஆனா மங்காத்தாவுக்கு U/A செர்டிப்பிக்கட்(வரியுடன்). 2011 இல் U/A செர்டிப்பிக்கட் படங்களின் வரி சதவீதம் சரியாக தெரியவில்லை. எனினும் மங்காத்தாவின் உண்மையான கலக்சன் 3 வருடம் கழித்து வந்த, எந்திரனின் ஒபெநிங்கை முறியடித்துவிட்டது என்று விஜய் தரப்பால் பிரச்சாரம் செய்யப்பட்ட "கத்தி" பட முதல் ஐந்து நாள் தமிழ்நாட்டு கலக்சனுக்கு சமனாகவே இருக்கிறது. இது அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்திய அதே வேளை கத்தி பட வசூல் பற்றிய பொதுமக்களின் நம்பிக்கையையும் தகர்த்துவிட்டது. கத்தி படம் போட்ட முதலை காப்பாற்றுமா என்று சந்தேகங்களும் எழத்தொடங்கிவிட்டன. (Photo- taken from twitter)
0 comments:
Post a Comment