சமீபத்தில் ரிலீஸான மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படத்தில் பாடல்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தில் ஒருசில பாடல்களை பாடிய தர்ஷனா தனது அனுபவங்களை ஒரு பேட்டியில் மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
'ஓ காதல் கண்மணி' மற்றும் "ஓகே பங்காரா" ஆகிய இரு மொழி படங்களில் சேர்த்து மொத்தம் ஐந்து பாடல்களை பாடியுள்ள தர்ஷனா, 'ரஹ்மான் சார் இசையில் பாடல் பாடுவது அதிலும் குறிப்பாக அவருடன் இணைந்து பாடுவது என்பது ஆஸ்கார் விருது, கிராமி விருது, தேசிய விருது ஆகியவைகள் எல்லாம் இணைந்து மொத்தமாக கிடைத்ததற்கு சமம் ஆகும். பாடல்கள் டிராக்லிஸ்ட்டில் என்னுடைய பெயர் அவருடைய பெயருக்கு பின்னால் இருந்ததை ரசித்து ரசித்து பார்த்தேன்.
முதன்முதலாக ரஹ்மான் இசையில் கடந்த 2007ஆம் ஆண்டு ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் நடித்த சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'பல்லேலக்கா' பாடலில் பாடியதாகவும், அதன்பின்னர் விஜய் நடித்த அழகிய தமிழ்மகன்' படத்திற்காக 'மதுரைக்கு போகாதடி' பாடல் உள்பட தனக்கு பல வாய்ப்புகள் அவர் கொடுத்துள்ளதாகவும் தர்ஷனா கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment