ஐபிஎல் 8வது தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில் நேற்று கொல்கத்தா- மும்பை அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின்போது இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணிக்கு 2வது ஓவரின் முதல் பந்தை வினய்குமார் வீச, கம்பீர் அதை சந்தித்தார்.
முதல் பந்திலேயே வினய்குமாரின் தன்னம்பிக்கையை சிதைக்க வேண்டும் என்று நினைத்த, கம்பீர், பிட்சை விட்டு இறங்கி வந்து அடித்தார்.
அப்போது பேட்டில் பந்து எந்த இடத்தில் பட்டதோ, அந்த இடம் துண்டாக முறிந்து விழுந்தது. கைப்பிடி மற்றும் அதனோடு எஞ்சிய சிறு பகுதி மட்டுமே கம்பீர் கையில் இருந்தது.
இதையடுத்து வேறு பேட்டை மாற்றி ஆடினார் கம்பீர். இந்த பேட்டை எம்.ஆர்.எப் தயாரித்திருந்தது.
சச்சினுக்கு பிறகு, கோஹ்லி, கம்பீர் போன்ற வீரர்கள் கைகளில் எம்.ஆர்.எப் அதிகமாக தவழ்கிறது. இந்த சம்பவத்தை பார்த்ததும், சமூக வலைத்தளமான டிவிட்டரில் அதை நகைச்சுவையாக்கி கருத்துகள் வலம் வந்தன.
யுவராஜ் சிங் தனது பங்கிற்கு டிவிட்டரில், "இப்போது பேட் கம்பீர் சைசுக்கு வந்துவிட்டது" என்று கேலியாக குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment