கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' திரைப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் வரிகள் இந்து மதத்தை களங்கப்படுத்துவதாக கூறி இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என விஷ்வ ஹிந்து பரீஷத் அமைப்பினர் சென்னை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து கமல்ஹாசன் அளித்த விளக்கத்தில், "மத்திய தணிக்கைத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டால் மட்டுமே படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்குவது குறித்து பரிசீலனை முடியும் என்றும், அவர்களே இந்த படத்தை ரசித்து பார்த்து படக்குழுவினர்களை பாராட்டியதோடு படத்திற்கு 'யூ' சர்டிபிகேட்டும் கொடுத்துள்ளனர் என்றும், இந்நிலையில் வேறு விஷ்வ ஹிந்து பரீஷத் இந்த விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுகின்றனர் என்றும் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இரணீயன் பாடலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் என்று கூறப்படுபவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கம்பர் எழுதிய வரிகள் என்றும் கூறியுள்ள கமல், விஷ்வ ஹிந்து பரீஷத் இந்த விஷயத்தை இத்துடன் முடித்து கொள்வது நலம் என்றும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment