↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
நீங்கள் மன அழுத்தத்தில் உள்ளீர்கள் என்ற அறிகுறியை உங்கள் உடல் தான் முதலில் உங்களுக்கு தெரிவிக்கும். இப்படிப்பட்ட மனச்சோர்வை வெற்றிக்கொள்ள 10 புத்திசாலித்தனமான வழிகளை தான் இப்போது பார்க்க போகிறோம்.
மன அழுத்தத்தால் தவிக்கும் பெண்களில் 65 சதவீதம் பேர்களுக்கு மன ரீதியான துயரங்களை உணர முடிவதில்லை என்று ஆய்வுகள் கூறுகிறது. மாறாக, முக்கியத்துவமற்ற விஷயங்களில் காலத்தை வீணாக்குவது, மதிய வேளைக்கு பின் மந்த நிலை, அளவுக்கு அதிகமாக உண்ணுதல் போன்ற அறிகுறிகளை காட்டும். மேற்கூறிய அறிகுறிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகளை உங்கள் உடல் காட்டும் போது, நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகிறது, என்று வாஷிங்டன் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மன அழுத்தம் உங்களை ஆட்சி செய்யும் முன்பு, நீங்கள் அதனை வெற்றிக் கொள்ள வேண்டுமானால், கீழ்கூறிய எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள். சந்தோஷத்தை அடையுங்கள்!
வைட்டமின் சன்ஷைன் எனப்படும் வைட்டமின் டி, செரோடோனின் மற்றும் ஆக்சிடாக்சின் போன்ற மன அழுத்தத்தை நீக்கும் ஹார்மோன்களை, மூளை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதனால் உங்கள் மனநிலை 30 சதவீதம் வரையாவது சாந்தப்படும். டெக்சாஸ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்களின் படி, ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளும் சரியான நேரம் காலை நேரமாம். அதனால் காலை வேளைகளில் வைட்டமின் டி-யை உட்கொண்டால், உங்கள் மன அழுத்தம் பாதியாக குறையும்.
நீங்கள் கடைப்பிடிக்கும் சுத்தத்திற்கான தரத்தை சற்று குறைத்தால், இன்னும் அதிக நேரம் மன ஓய்வில் ஈடுபடலாம். இதனால் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோனான கார்டிசோலின் உற்பத்தி குறையும். இந்த ஹார்மோன் உங்கள் மூளை செயல்பாட்டை பாதித்து, மன அழுத்தத்தை நீக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை தடுக்கும்.
உங்கள் கண்களுக்கும் நீங்கள் பழக்கப்பட்டிருக்கும் உங்கள் உயிரியல் கடிகாரத்திற்கும் இடையே நேரடி நரம்பு இணைப்பு உள்ளது. உங்கள் வீட்டையும் வேலை செய்யும் இடத்தையும், பகல் நேரத்தில், அதிக திறன் கொண்ட விளக்குகளை கொண்டு பிரகாசமாக வைத்திடுங்கள். மேலும் ஜன்னல்களின் திரைகளையும் விலக்கிடுங்கள். படுக்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, விளக்குகளின் வெளிச்சத்தை குறைத்து, கணிப்பொறியை மற்றும் வெளிச்சம் தரும் இதர எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை அணைத்து விடவும்.
நடனம் ஆடுவது என்பது உடற்பயிற்சி மற்றும் மெட்டுக்கேத்த அசைவுகளாகும். இவ்வகை செயல்பாடு, மனநிலையை ஊக்குவிக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து அதனை சீரான முறையில் வழங்கவும் செய்யும். நல்ல பலனை பெற, வாரத்திற்கு நான்கு முறை, 30 நிமிடங்களுக்கு நடனம் ஆடவும்.
நடனம் ஆடும் போது, அந்த பாட்டை பாடவும் செய்யுங்கள். பாடும் போது, அமைதி மற்றும் மனநிலையை ஊக்கப்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கும் மூளை. பெண்கள், தினமும் தங்களுக்கு பிடித்த பாட்டுக்களை 10-15 நிமிடம் வரை கேட்டு, அதனுடன் சேர்ந்து பாடி வந்தால், இந்த மனச்சோர்வில் இருந்து 55 சதவீதம் வரை குணமடையலாம்.
தினமும் அரை வெண்ணெய் பழத்தை உட்கொண்டால், மன அழுத்தம் வரும் இடர்பாடு குறைந்து, அதன் அறிகுறிகள் 25 சதவீதம் வரை குறையும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள மோனோ சேச்சுரேடட் கொழுப்புகள். இந்த ஊட்டச்சத்தால் உங்கள் மூளை டோபமைன் உற்பத்தியை அதிகரிக்கும்.
ட்ரிப்டோஃபன் என்ற மூளை அளவுகளை மேம்படுத்த உருளைக்கிழங்குகள் உதவுகிறது. ட்ரிப்டோஃபன் என்பது மன அழுத்தத்தை நீக்கும் ஹார்மோனான செரோடோனின் உற்பத்தியை 54 சதவீதம் வரை அதிகரிக்கும். ஆனால் இதனால் உங்கள் இடையின் அளவு பெரிதாகும் என்ற கவலை ஏற்பட்டால், குறைந்த கொழுப்பு மற்றும் அதிக ஸ்டார்ச் கொண்ட வெண்ணெய்யில்லா பாப்கார்ன், தானியங்கள் போன்றவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
மாதர் சங்கம் பற்றியெல்லாம் நாம் நிறைய படித்திருப்போம் அல்லவா? உண்மையை சொல்லப்போனால் அவை உங்களுக்கு நன்மையை அளிக்கும். வாரம் ஒரு முறை இப்படி பெண்கள் அவர்கள் குழுவுடன் அரட்டை அடிக்கும் போது, அவர்களின் மனது சந்தோஷம் பெற்று, ஒரு மாதத்திற்குள் ஆரோக்கியத்தை பெறுவார்கள்.
காலை சீக்கிரமாக எழுபவர்களை விட, இரவில் நீண்ட நேரம் கழித்து தூங்குபவர்களே மன அழுத்தம் ஏற்பட நான்கு மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. இரவு நீண்ட நேரம் விழித்திருந்து, காலை சூரிய உதயத்தை தவற விடுபவர்களின் உயிரியல் கடிகாரம் பாதிக்கப்படும். இதனால் மன அழுத்தத்தை நீக்கும் ஹார்மோன்களை மூளை உற்பத்தி செய்வது பாதிப்படையும். அதனால் தினமும் இரவு 11 மணிக்குள் தூங்கி விடுங்கள். ஒரு வாரத்திற்குள் மன சோர்வுக்கான அறிகுறிகள் மெல்ல குறைந்து விடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சீரான முறையில் மசாஜ் செய்து கொண்டால், எதிர்மறை உணர்ச்சிகளை தூண்டும் மூளையின் வலது பகுதியில் இருந்து மூளையின் செயற்பாடு இடது புறமாக திசை மாறும். இது நேர்மறையான உணர்ச்சிகளை கையாளும். வாரத்திற்கு 20 நிமிடம் மசாஜ் செய்து கொண்டால் போதும்; எண்டார்ஃபின்ஸ் என்ற நல்ல உணர்ச்சிகளை தூண்டும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்க தொடங்கி விடும் மூளை. இதனால் உடல் வலிகள் மற்றும் இதர அறிகுறிகள் 25 சதவீதம் வரை குறையும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment