உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சகலதுறை வீரர் யுவராஜ்சிங் இடம்பெறவில்லை.
தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டோனி யுவராஜை அணியில் சேர்த்து கொள்ளவில்லை என இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி மீது யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் உலகக்கிண்ண இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து இந்தி டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், மீண்டும் டோனியை வசைபாடியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தனது தந்தையின் மோசமான பேட்டியால் யுவராஜ் சிங் நெருக்கடியான நிலையில் இருக்கிறார்.
கடந்த சீசனில் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக யுவராஜ்சிங் விளையாடி வந்தார். இந்த சீசனுக்கு அவரை பெங்களூர் அணி விடுவித்தது.
இதனால் யுவராஜ்சிங் அதிக தொகைக்கு ஏலம் போகமாட்டார் என்று கருதப்பட்ட நிலையில், அவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ. 16 கோடி கொடுத்து ஏலம் எடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மேலும் ரவீந்தர ஜடேஜாவுக்கு பதிலாக யுவராஜ்சிங் தெரிவு செய்யப்பட்டிருந்தால் இந்திய மிடில் ஆர்டர் பலப்பட்டிருக்கும் என்பது தற்போது பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக டோனியை பற்றி யுவராஜ் தந்தை யோகராஜின் தரம் குறைந்த விமர்சனங்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதுவெல்லாம் சேர்ந்து ஐபிஎல் தொடரில் யுவராஜ்சிங்குக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
0 comments:
Post a Comment