சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 4வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் இன்று மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மித், மெக்குல்லம் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
சிறப்பாக விளையாடி வந்த நிலையில் ஸ்மித் 27 ஓட்டங்கள் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்திருந்த போது ஓட்ட முறையில் வெளியேற்றப்பட்டார்.
இதனையடுத்து வந்த ரெய்னாவை ராகுல் ஓட்ட முறையில் வெளியேற்றினார். அவர் 12 பந்துகளுக்கு 14 ஓட்டங்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் டோனி அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 29 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 53 ஓட்டங்கள் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்திருந்த போது பவுல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜடேஜாவும் பந்துகளை ஏதும் சந்திக்காமல் ஓட்ட முறையில் வெளியேற்றப்பட்டார்.
ஆரம்பத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை ஆடிய மெக்குல்லம் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர் 56 பந்துகளில் 100 ஓட்டங்கள் (7 பவுண்டரி, 9 சிக்சர்) குவித்தார். இவருடன் பிராவோ ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
சென்னை அணி பறிகொடுத்த 4 விக்கெட்டுகளில் 3 பேர் ஓட்ட முறையில் வெளியேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத் அணியின் இஷாந்த் சர்மா, கரண் சர்மா ஓட்டங்களை வாரி வழங்கியுள்ளனர்.
210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு வார்னர், தவான் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
தவான் 26 ஓட்டங்கள் எடுத்த போது மொகித் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து வந்த ராகுல் (5), ஓஜா (15) அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
சிறப்பாக விளையாடி வந்த வார்னர் அரைசதம் (53) கடந்து வெளியேறினார். இதில் 1 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும்
போபரா 22 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்க, கரண் சர்மா 4 ஓட்டங்களில் நடையை கட்டினார். வில்லியம்சன் (26), ரசூல் (2) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த லீக் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்திய சென்னை, தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
0 comments:
Post a Comment