லிங்குசாமி இயக்கத்தில் சண்ட கோழி படத்தில் விஷால் ஜோடியாக நடித்தார் மீரா ஜாஸ்மின். 2005ல் வெளியான இப்படத்தின் 2ம் பாகம் 10 வருடத்துக்கு பிறகு தற்போது உருவாக உள்ளது. அதற்கான ஸ்கிரிப்ட்டை லிங்கு சாமியே உருவாக்கி இருப்பதுடன் இயக்கவும் உள்ளார். முதல்பாகம் உருவானபோது மீரா ஜாஸ்மின் திருமணம் ஆகாமல் இருந்தார். கடந்த ஆண்டு அவருக்கு அனில் ஜான் என்பவருடன் திருமணம் ஆகிவிட்டது.
மீண்டும் அவரையே விஷால் ஜோடியாக இப்படத்தில் நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் 2ம் பாகத்தில் மீரா ஜாஸ்மினை சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிக்க கேட்டார் லிங்குசாமி. அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதில் மீராவுக்கு முக்கிய தொடர்புடைய கதாபாத்திரத்தை வழங்க முடிவு செய்திருக்கிறார். தற்போது விஷால் இயக்குனர் சுசீந்திரனின் பாயும்புலி படத்தில் நடித்து வருகிறார். இதில் காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிந்தபிறகு சண்டகோழி 2 ம் பாகத்தில் நடிக்க உள்ளார் விஷால்.
0 comments:
Post a Comment