↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பொதுவா சென்னை என்றாலே அதற்கு இன்னொரு பெயர் எப்பவுமே உண்டு “சிங்கார சென்னை வந்தாரை வாழ வைக்கும்” இந்த பெயர் பசியாலும் வறுமையாலும் சென்னைக்கு வந்தவர்களுக்கு மட்டுமே இன்றும் ஞாபகம் இருக்கும். ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இங்கே வந்தவர்கள் பலர் இன்று கோடி ரூபாய் காரில் உல்லாசமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் சினிமாவுக்கா வந்தவர்கள் மட்டுமே இன்றும் தெருவோர கடைகளில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு எப்படியாவது சினிமாவுல பெரிய இடத்துக்கு வந்திடனும்னு தினம் தினம் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் மருதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் தான் “சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது”. நாயகனாக சிம்ஹா நடித்திருக்கிறார். சினிமாவில் எப்படியாவது பெரிய இயக்குநராக வேண்டுமென்று சென்னையில் நண்பர்களுடன் ருமை ஷேர் செய்து கொண்டு தங்கியிருக்கும் இவருக்கு கதை எழுதவிடாமல் ஏதாவது தடங்கல்கள் வந்து கொண்டேயிருக்கிறது. இவர்கள் தங்கியிருக்கும் ரூமில் ஏதாவது பிரச்சனை வந்து அவர்கள் பல தடவை ரூமை காலி செய்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் நண்பர்கள் நால்வரும் ஆளுக்கொரு நண்பனுக்கு ஃபோன் செய்து “ரூம்ல கொஞ்சம் பிரச்சனை இன்னைக்கு நைட்டு மட்டும் உன் ரூம்ல படுத்துக்கவான்னு” கேட்க, அதை பார்க்கும் நமக்கே ச்ச்ச்சு கொட்டும் அளவுக்கு மனதை உருக்குகிறது.
அதே ருமில் வசிக்கும் கார்த்திக் எப்பவுமே ஏதாவது பெண்ணுடன் பேசிக் கொண்டு அவர்கள் தங்கியிருக்கும் ரூமிற்கு கூட்டி வந்து ஜல்சா செய்து கொண்டிருக்கிறார். மற்ற நண்பர்கள் கார்த்திக்கு இடம் கொடுத்துவிட்டு மாடியில் சென்று படுத்துக் கொள்கிறார்கள். இப்படி தனது சொந்த ஊருக்கு செல்லும் கார்த்திக்கு அங்கு வினோதினி என்ற பெண் அறிமுகமாகிறாள். நான் சென்னையில் TNPSC தேர்வு எழுத வருவேன் எனக்கு உங்களால் உதவி செய்ய முடியுமா என்று சொல்ல ஏற்கனவே கார்த்திக் இரை தேடும் கொக்கு இதில் மீன் தானாக வந்து இரையானால் சும்மா விடுமா. அப்படி இப்படின்னு பேசி வினோதினியை மீண்டும் தன் ரூமிற்கு கூட்டி சென்று உல்லாசமாக இருந்துவிட வினோதினி கர்ப்பமாகிறாள். தான் கர்ப்பமானதை கார்த்திக்கு ஃபோன் செய்து சொல்லும்போது அதை எப்படியாவது கலைச்சிடுன்னு சொல்வதால் கார்த்திக்கை தேடி சென்னைக்கு வருகிறார் வினோதினி. ஒவ்வொரு முறையும் வினோதினியிடமிருந்து தப்பித்து ஓடும் கார்த்திக் என்ன ஆனான், வினோதினியின் நிலை என்ன என்பதை திரையில் காண்க.
சினிமாவுக்கு கதை எழுத முடியாமல் தவிக்கும் சிம்ஹா அவர் எழுதும் கதையின் முதல் வரியை தாண்டுவதற்குள்ளே 4 ரூமை காலி செய்துவிடுகிற நிலைமை அவருக்கு. “ஹிரோ அங்கிட்டிருந்து வர்றான், ஹிரோயின் இங்கிட்டு இருந்து வர்றா” என்று இவர் ஒவ்வொரு முறை சொல்லும்போது ஏதாவது தடங்கல் வருவது இவரின் வாஸ்து பிரச்சனையா என்று நமக்கே தோன்றிவிடுகிறது.
சிம்ஹாவின் நண்பனாக நடித்திருக்கும் நாகராஜின் கதாபாத்திரம் ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும் அவருக்கும் ஒரு முக்கிய பொறுப்பை படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குநர். நாயகி வினோதினியின் நடிப்பும் பாராட்டும் விதமாகவே இருக்கிறது.
சினிமாவில் சாதிக்க வாய்ப்பு தேடி வருபவர்களின் சிவப்பு பக்கத்தை மட்டும் காட்டுவது படத்தை பார்க்கும் பலருக்கு இன்னும் மனநிலையை தாழ்வடைய செய்யும் விதமாக இருக்கிறது. அதை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம் ப்ரோ.
படத்தில் நடித்திருக்கும் அனைவரும் யதார்த்தமாக அவர்களது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக அமைகிறது. ஒளிப்பதிவு ஆங்காங்கே பல்லை இளித்துக் கொண்டிருந்தாலும் அதை நடிப்பில் ஈடு செய்துவிடுகிறார்கள் நடிகர்கள்.
படத்தின் மீது பல சர்ச்சைகள் இருந்தாலும் அதனையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு திரையில் படத்தை அன்புடன் வரவேற்கிறோம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top