அப்போது நிருபர்களிடம் அர்ஜுன் கூறியதாவது:
நல்லவன், கெட்டவன் இருவருக்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய கோடு. அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்கு யார் காரணம்? ஏன் கொல்லப்படுகிறார்கள் என்பதைத் துப்பறிந்து மர்மப் புதிர்களை விடுவிப்பதும்தான் கதை. கதையைக் கேட்டதும் ஷாம் கேரக்டரில் நடிக்கிறேன் என்று இயக்குனரிடம் சொன்னேன். அவர் மறுத்துவிட்டார். இதுவரை நான் நடிக்காத வேடம் அது. ஷாம் கேரக்டர் ஹைலைட்டாக இருக்கும்.
‘முதல்வன்’ படத்துக்குப் பிறகு மனீஷா கொய்ராலாவுடன் நடிக்கிறேன். இளையராஜாவின் இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். படத்துக்காக அமைக்கப்பட்ட போரன்சிக் லேப் அரங்கில், 15 நாட்கள் ஷூட்டிங் நடந்துள்ளது. இந்திய சினிமாவில் இதுபோன்ற தடய அறிவியல் ஆய்வகம் முழுமையாக இடம்பெறுவது இதுவே முதல்முறை. இவ்வாறு அர்ஜுன் கூறினார். ஷாம், ஏ.எம்.ஆர்.ரமேஷ், ஒளிப்பதிவாளர் சேது ஸ்ரீராம், தயாரிப்பாளர் தேஷ்ராஜ் மற்றும் படக் குழுவினர் உடனிருந்தனர்.
0 comments:
Post a Comment