↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இந்தியாவின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்தார். டெல்லியில் கிரிக்கெட் இன்ஸ்ட்டிடியூட் தொடக்க விழாவில் பங்கேற்ற ஹர்பஜன்சிங் கூறியதாவது: சச்சின், கங்குலி, டிராவிட், கும்ப்ளே, லட்சுமணன் போன்ற மிகப்பெரிய வீரர்களுடன் ஆடும் வாய்ப்பு கிடைத்தது எனது அதிருஷ்டமாகும்.
நான் கிரிக்கெட்டில் எதையாவது சாதித்துள்ளேன் என்றால், அதில் இவர்களின் பங்களிப்பு கண்டிப்பாக உள்ளது. இந்த மூத்த வீரர்கள் எனக்கு உரிய வகையில் வழிகாண்பித்தனர். இந்தியா கண்ட தலை சிறந்த கேப்டன்களில் ஒருவர் கங்குலியாகும். மேலும், இளம் பந்து வீச்சாளர்களின் திறமையை அப்படியே பயன்படுத்திக்கொள்வதுதான் கிரிக்கெட் இன்ஸ்டிடியூட்டின் நோக்கமாகும்.
சேவாக், கோஹ்லி உள்ளிட்ட தலை சிறந்த வீரர்கள் அவர்களுக்கே உரித்தான சிறப்பான டெக்னிக் வைத்துள்ளனர். எனவே, அவர்களின் திறமையை அப்படியே பயன்படுத்திக்கொள்வதுதான் நல்லது. இவ்வாறு ஹர்பஜன்சிங் கூறினார். ஏற்கனவே, டோணிக்கு எதிராக யுவராஜ்சிங் தந்தை யோக்ராஜ் பேட்டி கொடுத்தார், அதை எதிர்த்து மூத்த கிரிக்கெட்டர்கள் வாய் திறக்காத நிலையில், ஹர்பஜன்சிங்கும், கேப்டன்ஷிப் பற்றி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Home
»
»Unlabelled
» இந்தியாவின் தலை சிறந்த கேப்டன் கங்குலி: டோணியை சீண்டும் ஹர்பஜன்சிங்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment