↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பிரபல டான்ஸ் மாஸ்டரும், இயக்குனருமான பிரபுதேவா நேற்று முன் தினம் தனது பிறந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாடினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் பிரபுதேவா தனது பிறந்த நாளில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த ஆண்டு ரிலீஸான ஆக்சன் ஜாக்சன்' படத்தை அடுத்து பிரபுதேவா இயக்கவுள்ள 'சிங் இஸ் பிலிங்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வெள்ளி முதல் தொடங்கியுள்ளது. அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஜோடி சேரும் இந்த படத்தில் முன்னாள் உலக அழகி லாரா தத்தா, ரதி, அர்ஃபி லம்பா உள்பட பலர் நடித்துள்ளனர்.
ப்ரிதம் சக்கரவர்த்தி இசையமைக்கும் இந்த படத்தை 'கிரேசிங் கோட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி நாளில் ரிலீஸாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'சிங் இஸ் பிலிங்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை பிரபுதேவா மற்றும் அக்ஷய்குமார் ஆகியோர் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment