சமீபத்தில் டைரக்டர் ஷங்கரும் திருப்பதி பிரதர்ஸ் என்கிற பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் லிங்குசாமியும் ஒன்றாக கூடி பேசினார்கள்.
இந்த சந்திப்பு ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது என்ற செய்தி வெளிவந்தது. ஒருவேளை ரஜினி நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க, லிங்குசாமி தயாரிக்கிறாரோ என்கிற யூகத்தையும் கிளப்பிவிட்டது அது. நிஜம் என்ன? கிழிஞ்சுது கிருஷ்ணகிரி. அந்த நட்சத்திர ஓட்டலில் தனது புதுக்கதை டிஸ்கஷனுக்காக இருந்தாராம் லிங்குசாமி. உலகக் கோப்பை கிரிக்கெட் சீசன் என்பதால் நடுநடுவே கிரிக்கெட்டும் பார்ப்பார்களாம். அப்படியொரு நாள் இந்தியா விளையாடும் தினத்தன்றுதான் ஷங்கரை இன்வைட் செய்தாராம் லிங்கு. எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து அரட்டை ‘அடித்துக்’கொண்டே கிரிக்கெட் பார்த்திருக்கிறார்கள். அதுதான் வேறு மாதிரியாக பரவி விட்டது.
0 comments:
Post a Comment