↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பொதுவாக ஒரு போட்டோவோ, வீடியோவோ சமூக வலைத்தளங்களில் வைரலாக மாற்றப்படும். ஆனால் ஒற்றை வார்த்தை வைரலாக மாறியுள்ளது தற்போது தமிழக நெட்டிசன்களிடம். அந்த வார்த்தைதான் ஆஹான்..
பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும், கருத்தை சொல்வதற்கு பதிலாக மீம்ஸ் படங்களை போடுவது தற்போது டிரெண்ட். "இந்த தத்துவத்த தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வச்சிட்டு பக்கத்திலேயே உட்கார்ந்துக்க.. நாளைக்கு வர்ற சந்ததிகள் அதை பார்த்து தெரிஞ்சிக்கட்டும்" என்ற கவுண்டமணி டயலாக்கா இருக்கட்டும், "இது உங்களுக்கு தெரியுது.. ஜனங்களுக்கு தெரியலியே" என்பது போன்ற பல டயலாக்குகளை நண்பர்கள் போடும் கருத்துக்கு கீழே போடுவார்கள்.
ஆனால், இப்போது எல்லா கருத்துக்கும், ஒரே ரெடிமேட் பதில் ஆஹான்.. இந்த டயலாக் பின்னால் ஒரு எஸ்டிடி உள்ளது. அதாவது ஹிஸ்ட்ரி. வைகை புயல் வடிவேலு ஒரு படத்தில் நல்ல கர்லிங் ஹேர் வைத்துக் கொண்டு, பஸ் ஸ்டாண்டுகளில் நகை திருடுவார். அப்போது அருண் விஜயிடமும் ஆட்டையை போட்டு வாயி்ல் போட்டு விழுங்கிவிடுவார்.
செயினை காணோமே என்று தேடியலையும், அருண் விஜய், வடிவேலுவை கூப்பிட்டு பேச்சை ஆரம்பிப்பார். அப்போது, ஒன்றுமே தெரியாதவர் போல முகத்தை வைத்துக் கொண்டு, ஆஹா(ன்) என்று ஒரு ரிப்ளே கொடுப்பார் வடிவேலு. இதில், கடைசி வார்த்தையான, 'ன்' சைலண்ட். இந்த ஆஹான்தான் இப்போது டிரெண்ட் ஆகியுள்ளது. நீங்கள் வேணுமானால் நண்பர்கள் முகநூலுக்கு ஒரு எட்டு போய் பாருங்கள். எத்தனைபேர் ஆஹான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று..
இதனிடையே, கூகுள் பிளையிலும், ஆஹான் என்ற பெயரில் அப்ளிகேசனையும் வெளியிட்டுள்ளனர் என்றால் பாருங்கள், வைகை புயலின் புகழை.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment