ஐ.பி.எல். 8வது போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் பாலிவுட் நடிகர்கள் ரித்திக் ரோஷன், ஷாஹித் கபூர், பர்ஹான் அக்தர், நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
அப்போது ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அணிகளுக்கும் ஜெர்சி வழங்கபட்டது.
இதில் பஞ்சாப் கிஸ் லெவன் அணியின் வீரர்களின் ஜெர்சி சிகப்பு மற்றும் சில வண்ணங்களில் இருந்தது. அதன் பின் புறம் ஆணுறை விளமபரம் அச்சிடப்பட்டு இருந்தது.
இதை பார்த்த வீரர்கள் வெட்கபட்டனர். சில வீரர்கள் அந்த ஜெர்சியை திருப்பி கொடுத்து விட்டனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அந்த அணியின் பெயர் குறிப்பிட விரும்பாத வீரர் ஒருவர், “எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
என் குடும்பத்தினர் நான் விளையாடும் போட்டிகளை பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கப்போகிறது. முக்கியமாக என் நண்பர்களின் கிண்டலை எப்படி சமாளிப்பது என்றுதான் தெரியவில்லை” என கூறியுள்ளார்.
இந்த அணி தனது முதல் போட்டியில் நாளை ராஜஸ்தான் றொயஸ்சுடன் மோதுகிறது. ஐபிஎல் ஸ்பான்சர்ஷிபில் கருத்தடை நிறுவனங்களுக்கு தடை என்று விதிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment