2015ம் ஆண்டில் கால்வருடத்தில் அதிகம் வசூல் ஆன, மற்றும் திரையில் ஆட்சி செலுத்திய படங்கள் லிஸ்டில் ‘ஐ’ படமும் ‘என்னை அறிந்தால்’ படமும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. இதுவரையிலும் 58 படங்கள் இவ்வருட கால் ஆண்டில் வெளியாகியுள்ளன.
இதில் 2015ன் கால் வருட முடிவில் எந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவை என முடிவுகள் வெளியாகியுள்ளன. அதிக அளவு தியேட்டர்களில் வெளியான படங்கள் லிஸ்டில் என்னை அறிந்தால் -500 திரையரங்குகளிலும், ஐ -400 திரையரங்குகளிலும், காக்கிசட்டை -350 திரையரங்குகளிலும், அனேகன் -330 திரையங்குகளிலும், மற்றும் வலியவன்-300 திரயரங்குகளிலும் வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய வணிக வெற்றி என்ற ரீதியில் ஐ மற்றும் என்னை அறிந்தால் முதல் இரண்டு இடங்களையும், அனேகன், காக்கிசட்டை, ஆம்பள உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
மிகப்பெரிய தொடக்கத்தை கொடுத்தவை என்ற ரீதியிலும் ஐ, என்னை அறிந்தால் படங்கள் இடம்பிடித்துள்ளன. அனேகன், காக்கி சட்டை ஆம்பள உள்ளிட்ட படங்களுக்கும் மிகப்பெரிய தொடக்கம் கொடுத்த படங்களாக அடுத்தடுத்த இடங்களில் பதிவாகியுள்ளன.
0 comments:
Post a Comment