ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் அமைந்துள்ளது நுபேரா பள்ளத்தாக்கு (Nubara Valley). |
நுவேரா பள்ளத்தாக்கினை சுற்றி எங்கு பார்த்தாலும், அழகிய இயற்கை காட்சிகள், ஒட்டகங்கள், பாலைவனம், மணற்குன்றுகள், பழங்கால கோயில்கள் போன்றவைகளே காட்சியளிக்கும். நுபேரா பள்ளத்தாக்கு Ldumra என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த பள்ளதாக்கு முழுவதும் மலர்கள் சூழ்ந்து காணப்படுவதால் இதற்கு இப்படியொரு பெயரும் உண்டு. இமாலய மலையால் சூழப்பட்ட இப்பள்ளத்தாக்கு, குளிர்காலத்தில் ஒரு அழகான நிலவு போன்று காட்சியளிக்கும், மேலும் கோடைக்காலத்தில் எங்கு பார்த்தாலும் பச்சை வண்ணக்காட்சிகளாக இருக்கும். வெறும் இயற்கை காட்சிகளால் மட்டும் சுற்றுலாப்பயணிகளை கவருவதோடு மட்டுமல்லாமல் ஏராளமான புத்த தலங்களும் இங்கு உள்ளன. பார்க்க வேண்டிய இடங்கள்
டிஷ்கிட் – மடம்
டிஷ்கிட் பகுதியில் 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மிகப் பெரிய பழமையான மடாலயம் அமைந்துள்ளது.இந்த மடாலயம் திபெத்திய பௌத்த மத பிரிவுக்குரியது. இதனை Changzem Tserab Zangpo என்ற பௌத்த துறவி திபேத்திய கட்டிடக்கலை பாணியில் அமைத்துள்ளார். இந்த பகுதி கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரத்து 310 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த பள்ளதாக்கு பகுதியில் திபேத்துக்கும், சீனாவுக்கு இடையிலான போக்குவரத்து வழி அமைந்துள்ளமை மிக முக்கியமான அம்சமாகும். டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் இங்கு பண்டிகை கொண்டாடப்படுகிறது டொஸ்மோச்சே என்று அழைக்கப்படும் இந்த பண்டிகை, சமயம் சார்ந்த வழிபாடுகள், விளையாட்டு, கலை மற்றும் கலாசாரத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த பகுதிக்கு சுற்றுலாப் பயணம் செய்ய விரும்புவோருக்கு அங்கு சென்று தங்குவதற்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய தனியார் ஹொட்டல்கள் உள்ளன. உள்ளூர் வாசிகளின் வீடுகளில் தங்க கூடிய வசதிகளும் உள்ளன. உள்ளூர் உணவை ருசி பார்ப்பதற்குசுத்தமான உணவகங்களும் இருக்கின்றன. இங்கு சுற்றுலாசெல்ல வேண்டுமானால், கோடைக்காலமான யூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் சுற்றுலா பயணம் செல்வது சிறந்த அனுபவங்களை தரும். குளிர் காலத்தில் டிஷ்கிட் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படும்.
பனாமிக்
பனாமிக் பகுதிக்கு வயதானவர்கள் சுற்றுலா செல்வது கொஞ்சம் கடினமான ஒன்றாகும், ஏனெனனில் இவை கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரத்து 442 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இந்த பகுதியில் உள்ள சிறப்பு என்னவெனில், இதன் மலை உச்சியில் ஒரு சிறிய வெந்நீர் ஊற்று அமைந்துள்ளது. இந்த வெந்நீரில் அதிகளவில் சல்பர் என்ற இராசயனம் அடங்கியுள்ளது. இது நோய்களை குணமாக்கும் என நம்பப்படுகிறது. இந்த பனாமிக் பகுதி, தேனிலவு செல்லும் தம்பதியினருக்கு ஏற்ற இடமாகும், மேலும் ஷொப்பிங் செய்வதற்கு இது ஏற்ற இடமாகும், இங்கு காஷ்மிர் கம்பளிகள், சால்வைகள், திபெத்திய கலைப்பொருட்கள், ஆப்ரிகாட்,அக்ரூட் போன்ற தரமான பொருட்கள் கிடைக்கும். இங்கு சுற்றுலா செல்பவர்கள் தங்குவதற்கு, பெரிய நட்சத்திர ஹொட்டல்கள் கிடையாது, குறிப்பிட்ட தங்கும் விடுதிகள் மட்டும் உள்ளன, மேலும் பெரிய உணவங்களும் கிடையாது, நாம் தங்கும் விடுதியில் வழங்கப்படும் உணவுகளை தான் உட்கொள்ள வேண்டும். கோடைகாலமான யூன் முதல் ஆகஸ்ட் மாதங்கள் வரை மட்டுமே இங்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுகிறது.
Hunder
டிஷ்கிட் பகுதியிலிருந்து 7 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம் Hunder.புத்த மடாலயம், மணற்குன்றுகள், குளிர்பாலைவனம், பிரமிப்பூட்டும் இயற்கை காட்சிகள் போன்றவையே இதன் சிறப்பு ஆகும். இந்த பகுதியை சுற்றி வறட்சியாக காணப்பட்டாலும், இங்குள்ள கிராமங்களில் விவசாயம் நடைபெறுகிறது, இங்கு விளையும் ஆப்பிள், பாதம், அக்புரூட் போன்றவை புகழ்பெற்றவை. மேலும், இங்கு சுற்றுலாபயணிகள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்படுகின்றனர், இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் திருவிழா பண்டைய பண்பாட்டை எடுத்துரைப்பதாக இருக்கும், மேலும் சம்பா நடனம், பாராம்பரிய கலை மற்றும் விளையாட்டு காட்சி போன்றவை இந்த திருவிழாவில் முக்கிய அம்சமாகும். குளிர்ச்சி பிரதேசமாக இருப்பதால், இங்கு கோடைகாலமான யூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சுற்றுலா செல்லலாம். |
தேனிலவு ஜோடிகளா? கண்டிப்பாக இங்கு செல்லுங்கள் (வீடியோ இணைப்பு)
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment