உலகக்கிண்ணம் முடிந்தவுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக ஹாடினும், கிளார்க்கும் அறிவித்தவுடன், அவுஸ்திரேலிய அணி இனி என்ன ஆகும் என்ற சிறிய சலசலப்பு கூட அந்த அணியில் இல்லை.
அவுஸ்திரேலிய அணி சிறந்த அணியாகவே வலம் வரும் என்ற நம்பிக்கையுடன், ஒரு நிஜ சம்பியனாகவே இருக்கிறது.
முன்னதாக உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் மைக்கேல் கிளார்க் காயம் காரணமாக விளையாடவில்லை.
அந்த ஆட்டத்திற்கு ஜார்ஜ் பெய்லி அணித்தலைவராக இருந்தார். ஆனால் காயத்தில் இருந்து கிளார்க் மீண்டு வந்து அணியில் இணைந்த போது பெய்லி மீண்டும் கரையில் வைக்கப்பட்டார்.
அதற்கு பின்,இந்த உலகக்கிண்ண தொடரில் வேறு எந்த ஆட்டத்திலும் பெய்லி களமிறக்கப்படவில்லை. இறுதிப் போட்டியில் வென்று அவுஸ்திரேலியா சம்பியன் பட்டம் வென்ற போது சிரித்த முகத்தோடு கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டார் பெய்லி.
அணித்தலைவரை கூட கரையில் வைத்து ஆடிபார்க்கும் ஆச்சரியங்களை அவுஸ்திரேலிய அணி நிகழ்த்துகிறது. இந்த காரணங்களினால் தான் நம்பர் 1 இடத்தில் அசைக்க முடியாத அணியாக அவுஸ்திரேலியா இருக்கிறது.
0 comments:
Post a Comment