↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், சிறந்த வீரர்களை கொண்ட உத்தேச அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால், அரையிறுதி வரை இந்திய அணியை சேர்ந்த ஒரு வீரரும் அதில் இடம்பெறவில்லை. உலக கோப்பை தொடர் முடிந்ததும், ஐசிசி அமைப்பு, ஒரு உத்தேச அணி பெயரை வெளியிடும். அதில் உலக கோப்பையில் சிறப்பாக ஆடிய வீரர்கள் அடங்கியிருப்பார்கள். இம்முறையும் அதுபோல உத்தேச அணி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்து. ஆனால் இந்தியாவை சேர்ந்த எந்த ஒரு வீரரின் பெயரும் அதில் இல்லை.

அந்த அணி விவரம்: பிரெண்டன் மெக்கல்லம் (கேப்டன்), சங்ககாரா, ஸ்மித், டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், கோரி ஆன்டர்சன், வெட்டோரி, ஸ்டார்க், டிரெண்ட் பவுல்ட், மோர்க்கல். மற்றும் 12வது வீரராக ஜிம்பாப்வேயின் பிரெண்டன் டைலர் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலக கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் பட்டியலில் உமேஷ் யாதவ், 18 விக்கெட்டுகளுடன், 3வதாகவும், 17 விக்கெட்டுகளுடன் ஷமி 4வதாகவும், உள்ளார். அஸ்வின் 13 விக்கெட்டுகள் எடுத்துள்ள போதிலும், சுழற்பந்து வீச்சாளர்களில் மிகவும் சிக்கனமானவராக உள்ளார். ஆனால் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்க்கலை சேர்த்துள்ள ஐசிசி, உமேஷ் யாதவை தவிர்த்துவிட்டது.

நியூசிலாந்து ஸ்பின்னர் வெட்டோரியை சேர்த்துள்ள, ஐசிசி அஸ்வின் பெயரை விலக்கிவிட்டது. கேப்டன்ஷிப், விக்கெட் கீப்பிங், பினிஷிங் ஆகிய மூன்று துறைகளிலும் கலக்கிவரும் இந்திய கேப்டன் டோணியும், இந்த உத்தேச அணியில் இடம்பெறவில்லை.

ஐசிசி ஏன் இப்படி இந்திய அணியை புறக்கணித்தது என்பதுதான் தெரியவில்லை. எனவே டோணி இல்லாத இந்த உத்தேச அணி சாணிக்கு சமம் என்கின்றனர் இந்திய ரசிகர்கள்.

உலக கோப்பையில் 7 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம், அரையிறுதியில் தோற்றது. அப்படியும், ஸ்டார்க், ஜான்சன், பால்க்னர் போன்ற தரமிக்க பந்து வீச்சாளர்களை எதிர்த்து, டோணி, ரஹானே, தவான், ரோகித் ஷர்மா போன்றோர் கணிசமாக ரன் அடித்து போராடிதான் இந்தியா தோற்றது. பலமிக்க ஆஸி. பேட்டிங் வரிசையில் இருந்து, 4 விக்கெட்டுகளை கழற்றினார் உமேஷ் யாதவ். அப்படியிருந்தும் இந்திய வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top