இந்தியாவின் தலைநகரான டெல்லியை அணு ஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்ட நகரமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. |
மத்திய அரசு டெல்லியை அணு ஆயுத ஏவுகணையில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பு ஒன்றினை அமைக்கும் பணியை துவக்கியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம், தொலை தூர ஏவுகணையை கண்டறியும் ரேடார் நிறுவப்படும் என்றும் அணுஆயுத ஏவுகணை தாக்க வந்தால், 800 கி.மீ துாரத்திற்கு முன்பே அதை கண்டறிந்து, ஏவுகணையை செயல் இழக்கச் செய்ய முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதனை மேம்படுத்தி, ஏவுகணையை 5 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு முன்பே கண்காணித்து செயல் இழக்க செய்ய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திதற்கான பணிகள், வரும் 2016ம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் டெல்லியில் நிறுவப்பட்டதும் அடுத்து மும்பை நகரிலும் செயல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற அணுஆயுத தடுப்பு சாதன்ங்கள் உலக நகரங்களான வாஷிங்டன், பாரீஸ், பெய்ஜீங், லண்டன் ஆகிய சில நகரங்களில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. |
அணு ஆயுதங்களாலும் தாக்க முடியாத நகரமாக மாறும் டெல்லி
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment