ஈராக்கை சேர்ந்த அலி சதாம் என்ற நபர், அந்நாட்டிலேயே 301 கிலோ எடையுடன் வாழும் அதிசய மனிதர் ஆவார்.
இவர் காலை உணவாக 24 முட்டைகள், மதிய உணவாக 2 முழு கோழிகள் மற்றும் 12 சப்பாத்திகள், இரவு உணவுக்கு ஒரு முழு ஆடு, 2 லிட்டர் பால் மற்றும் 15 அரேபிய ரொட்டிகளை சாப்பிட்டு வருகிறார்.
இந்நிலையில் அலியால் உணவை கட்டுப்படுத்த முடியாததால், நிரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் தூக்க குறைபாடுகளால் அவதிக்குள்ளாகியுள்ளார்.
மேலும் இவரது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அவசர சிகிச்சை மேற்கொள்ள, கடந்த மார்ச் 16ம் திகதி அங்குள்ள BLK Super Speciality மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அலியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது உடலின் ஒவ்வொரு உறுப்பை சுற்றியும் அதிக அளவில் கொழுப்பு இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து அவருக்கு laparoscopy சிகிச்சையை மேற்கொள்ள மருத்தவர்கள் முடிவு செய்தனர்.
சமீபத்தில் இந்த சிகிச்சையை, இரண்டு மருத்துவர்களை கொண்ட மருத்துவக்குழு ஒன்று வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
இதுகுறித்து சிகிச்சை அளித்த மருத்தவர் டீப் கோயல்(Deep Goel) பேசுகையில், சிகிச்சை முடிந்த 5 நாட்களில், அலியின் 20 கிலோ எடை குறைந்திருக்கிறது. மேலும் அடுத்த ஓராண்டிற்குள் 151 கிலோ எடை வரை குறைய வாய்ப்புள்ளது என பேசியுள்ளார்.
இது தொடர்பாக அலி கூறுகையில், அதிக எடையுடன் நான் ஒவ்வொரு நாளும் அவதியுற்று வந்தேன்.
தற்போது மருத்துவர்கள் எனக்கு திரவ உணவுகளை அளித்துவருவதால் எடை குறைவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் நான் ஒரு சராசரி மனிதரை போல் வாழ்க்கையை தொடங்குவேன் எனவும் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment