பொதுவா ஹாலிவுட் நடிகை இந்திய சினிமாவுல நடிக்க வந்தாலே ரசிகர்கள் சும்மா ரவுண்டு கட்டி அடிப்பாங்க, இதுல ஹாலிவுட் ஆபாச பட நடிகை என்றால் சும்மா விடுவாங்களா, சுமார் 4 வருஷத்துக்கு முன்னாடி மும்பை விமான நிலையமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் கூட்டத்தில் நிரம்பியது, இது வேற யாருக்குமில்ல கவர்ச்சி புயல் சன்னி லியோனுக்கு தான்.
இனி ஆபாச படங்கள் வேண்டாம் என்று பெட்டியுடன் கணவரை கூட்டிக் கொண்டு பிறந்த வீடான இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவர் சன்னி லியோன். ஆனால் இங்கு அவர் வந்ததும் அவரை பலர் பலவிதங்களில் அணுக முயற்சி செய்ய அதெற்கெல்லாம் மசியாமல் சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததும் அதில் நடிக்க சென்றுவிட்டார். என்னதான் சினிமாவில் நடித்தாலும் அம்மணி ஆங்கிலேயர் நாட்டில் அந்த விஷயத்துக்குதான் ஃபேமஸ். அதை எப்படி மறக்க முடியும் என்று பெருமூச்சு விடுகிறார்கள் பல முக்கிய புள்ளிகள்.
ஒவ்வொரு பொது நிகழ்ச்சிக்கும் செல்லும்போது அவரை ஏதாவது ஒரு சில்மிஷம் செய்து வீட்டுக்கு பேக்கப் செய்து அனுப்பிவிடுகிறார்கள் ரசிகர்கள். இன்று பாலிவுட் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தாலும் அவரால் சினிமா விழாக்களிலேயே நிம்மதியாக கலந்து கொள்ள முடியவில்லையாம். இதனையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம் சன்னி லியோன்.
இந்நிலையில் தற்போது சன்னி லியோனின் கணவரும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். பாலிவுட் படமொன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் இவர். ம்ஹூம் இவங்கள வட நாட்டிலேயே வடை சுட்டுட்டு இருந்திட சொல்லுங்க தமிழ்நாடு பக்கம் வந்தா எத்தனை பேர் செருப்பும், கையுமாக அலைவார்களோம். அய்ய்யய்ய்யோ….
0 comments:
Post a Comment