ஐசிசி தலைவராக செயற்பட்ட முஸ்தபா கமாலின் ராஜினாமாவைத் தொடர்ந்து, வங்கதேசத்திற்கான இந்திய அணியின் சுற்றுப்பயணம் ரத்தாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐசிசி தலைவராக இருந்த வங்கதேசத்தைத் சேர்ந்த முஸ்தபா கமால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதன்போது ஐசிசி தலைமை அதிகாரியான சீனிவாசனை கடுமையாக விமர்சித்திருந்தார். இதன் காரணமாக இந்திய அணியின் வங்கதேச தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எட்டாவது ஐபிஎல் தொடர் முடிந்த பின், யூன் மாதம் வங்கதேசம் செல்லும் இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.
இதனிடையே, உலகக்கிண்ண தொடரில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய காலிறுதியில் நடுவரின் தீர்ப்பை முஸ்தபா கமால் விமர்சித்திருந்தார்.
வங்கதேசத்தை சேர்ந்த இவருக்கு சம்பியன் பட்டம் வென்ற அவுஸ்திரேலிய அணிக்கு கிண்ணத்தை வழங்கும் கௌரவமும் தரப்படவில்லை.
இதனால் கோபமடைந்த கமால் முஸ்தபா, தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தவிர, சேர்மன் சீனிவாசன் குறித்து கடும் விமர்சனம் செய்தார்.
முஸ்தபாவின் இந்தச் செயலால், இந்தியாவின் வங்கதேச பயணம் ரத்தாகும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் சபை கூட்டம் விரைவில் கூடும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment