அண்மையில் வெளி வந்துள்ள 'கொம்பன்' படத்தில் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஐ.எம்.விஜயன் நடித்துள்ளது பலருக்கும் தெரியாது.
சிறந்த கால்பந்து வீரரான கேரளாவை சேர்ந்த ஐ.எம்.விஜயன் தமிழில் நடித்துள்ள இரண்டாவது படம் கொம்பன். ஏற்கனவே திமிரு படத்தில் ஷ்ரேயா ரெட்டிக்கு அண்ணனாக வந்து கலக்கியிருப்பார் விஜயன். அந்த படத்தில் உன் கையால உயிர் பிழைப்பதா? என்று விஷாலிடம் கூறியவாரே தனது கையை வெட்டிக்கொண்டு கட்டிடத்தின் மேல் இருந்து விழுந்து சாகும் கேரக்டரில் விஜயன் மிரட்டியிருப்பார்.
'கொம்பன்' படத்தில் மெயின் வில்லனான சூப்பர் சூப்பராயனின் இரண்டு மகன்களில் ஒருவராக விஜயன் நடித்துள்ளார். கரடு முரடான அவரது முகத்துக்கு ஏற்ற வில்லன் வேடமாக இருந்தாலும் கொம்பன் படம் விஜயனின் நடிப்புக்கு தீனி போடும் விதத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒப்புக்கு சப்பாக நடிக்க வைத்த மாதிரியே தோன்றுகிறது.
ஜெயிலுக்குள் வைத்து ராஜ்கிரணை போட்டுத்தள்ள திட்டமிட்டு வாங்கிக் கட்டுகிறார். பின்னர், கிளைமாக்ஸ் கட்சியில் கார்த்தியிடம் அடி வாங்குவதோடு அவரது நடிப்பு முடிகிறது. ஆனால் திமிரு படத்தில் ஷ்ரேயா ரெட்டியின் இரண்டு அண்ணன்களில் ஒருவராக வந்து கலக்கு கலக்கு என்று கலக்கியிருப்பார். அந்த வகையில் கொம்பன் படத்தில் ஐ.எம்.விஜயனின் நடிப்பு பெரியதாக இல்லையென்றாலும் நீண்ட காலம் கழித்து கொம்பனில் வில்லனாக ஐ.எம்.விஜயன் களமிறங்கியிருப்பது மீண்டும் அவர் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

மலையாளத்தில் ஐ.எம்.விஜயன் நடித்த முதல் படம் சாந்தம். கடந்த 2001ஆம் ஆண்டு ஜெயராஜ் இயக்கத்தில் வெளி வந்த இந்த படம் தேசிய அளவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. கால்பந்தை பொறுத்த வரை, கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய கால்பந்து அணிக்காக ஐ.எம்.விஜயன் விளையாடியுள்ளார்.
இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் இவரும் ஒருவர். இன்னொருவர் பாய்ச்சுங் பூட்டியா. இந்த இருவரும் இணைந்து இந்திய கால்பந்து அணிக்கு பல வெற்றிகளை தேடி கொடுத்துள்ளனர். ஐ.எம்.விஜயன் இந்திய அணிக்காக 79 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 40 கோல்களை அடித்துள்ளார். மோகன்பாகன், சர்ச்சில் பிரதர்ஸ்,ஈஸ்ட் பெங்கால், எப்.சி. கொச்சி போன்ற புகழ்பெற்ற கிளப் கால்பந்து அணிகளுக்காகவும் ஐ.எம்.விஜயன் விளையாடியுள்ளார்.
0 comments:
Post a Comment