பெங்களூரு றோயல் சேலஞ்சர்ஸ் அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோஹ்லி இந்த நம்பிக்கையை வெளியிட்டார்.
முழங்காலில் காயம் அடைந்த மிட்செல் ஸ்டார்க் குணமடைந்து வருகிறார். அவர் முதல் 4 ஆட்டங்களுக்கு பிறகு எங்களது அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக நான், கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் தினேஷ் கார்த்திக், டேரன் சேமி, பத்ரிநாத், மன்தீப் சிங் ஆகியோர் எங்கள் அணியில் இடம் பெற்று இருப்பது துடுப்பாட்டத்தில் எங்கள் அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும் என கோஹ்லி தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்துவதில் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment