இப்போதுள்ள காமெடி நடிகர்கள், அடுத்தவரை குறைசொல்லியோ, அல்லது வர்ணித்தோதான் பார்ப்பவர்களை சிரிக்கவைக்கின்றனர்.
இந்த பாணி படத்தோடு நின்றுவிட்டால் பிரச்சனையில்லை. ஒரு பிரபல தெலுங்கு நடிகர் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் சமந்தாவின் இடுப்பை பற்றி வர்ணித்தது ஒரு பெரிய பிரச்சனையை உண்டாக்கியுள்ளது.
அது வேறு யாரும் இல்லை, தெலுங்கு சினிமாவின் முன்னணி காமெடிநடிகர்களில் ஒருவரான 'அலி'தான். மேடையில் பேசிக்கொண்டிருந்த அவர், சமந்தாவை பற்றி பேசும் போது 'அவரின் இடுப்பு "பென்ஸ் சர்கில்" போன்று இருக்கும் என கூறியது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.
இதை கேட்டு அனைவரும் சிரித்ததால், சமந்தா கடும் கோபமடைந்துள்ளார். இசை வெளியீடு விழாவை ஒருங்கிணைத்தவர்களிடமும், தயாரிப்பாளரிடமும் முறையிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment