தமிழ் சினிமாவில் மெல்லிசை பாடகர்களுக்கு மத்தியில் தனது கணீர் குரலால் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் நாகூர் ஹனிபா.
96 வயதான அவர் இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் இஸ்மாயில் முஹம்மது ஹனிபா என்ற தனது பெயரை சுருக்கி இ.எம்.ஹனிபா என்று அழைக்கப்பட்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது.
இவர் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியும், இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
‘எல்லோரும் கொண்டாடுவோம்’ ‘உன் மதமா என் மதமா’ மற்றும் ‘இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ போன்ற பாடல்கள் சாதி மத வேறுபாடுகளைக் கடந்து பட்டிதொட்டியெங்கும் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
0 comments:
Post a Comment