சிவகார்த்திகேயன்கூட புது 'காக்கி சட்டை' போட்டு ஆசைய நிறைவேற்றிக்கிட்டாரு. ஏன் நடிகைங்களுக்கு விஜய சாந்தி மாதிரி காக்கி சட்டை மாட்டி வில்லன்களை பாய்ந்து பாய்ந்து அடிக்க விருப்பம் இல்லை?
சில நடிகைகள் போலீசா நடிச்சாங்க. ஜீவிதா (தர்மபத்தினி), லட்சுமி (உதயகீதம்), மாதிரி சில சீனியர் ஹீரோயின்கள் போலீசா நடிச்சு ஹீரோக்களுக்கு அட்வைஸ்தான் பண்ணினாங்களே தவிர, ஆக்ஷன்ல பெருசா இறங்கல. ரொம்ப நாளைக்குப் பிறகு சினேகா 'பவானி ஐ.பி.எஸ்'ங்கிற படத்துல போலீசா நடிச்சாங்க. திரையில அவுங்க மிடுக்கா நடந்து வந்தாலும் நம்ம கண்ணுக்கு அன்னம் நடந்து வர்ற மாதிரிதான் தெரிஞ்சுது.
அவுங்க அவ்ளோ அழகு. அதுக்கு அவுங்க என்ன பண்ண முடியும்? சஞ்சனா சிங் 'ரகளபுரம்' படத்துல கிளாமர் போலீசா கலக்குனாங்க. சட்டை பட்டன் தெறிச்சு விழுற மாதிரி டிரஸ் போட்டு, பொம்பள போலீசுன்னா சும்மாவா, நாங்களும் காட்டு காட்டுன்னு காட்டுவம்ல (வில்லன்களை அடிக்கிறதுதான்) என்று காட்டினாங்க.
ஹீரோயின்களுக்கு ஏன் போலீஸ் ஆசை இல்லேன்னு கவலைப்படுறவங்களுக்கு ஒரு செய்தி - விரைவில் நமீதா ஒரு படத்துல போலீசா நடிக்கப்போறாங்க. "மச்சான் நீ திருடுது, பொய் சொல்லுது, கொள்ளை அடிக்குது. அதனால நான் உன்னை அடிக்குது"ன்னு பன்ச் டயலாக் பேசப்போறாங்க. சம்பளத்துலேருந்து, பார்ட்டியில ஆடுறது வரைக்கும் ஹீரோக்களுக்கு சமமா வளர்ந்து நிக்கிற ஹீரோயின்ஸ் விஜயசாந்தி இடத்தைப் புடிங்களேன்...
0 comments:
Post a Comment