↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
வைகைப்புயல் வடிவேலு தற்போது நடித்து கொண்டிருக்கும் 'எலி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு காலத்தில் ஷங்கரின் நாயகியாக நடித்த நடிகை சதா, இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
யுவராஜ் தயாளன் இயக்கி வரும் இந்த படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. முழுக்க முழுக்க காமெடி திரைக்கதையான 'எலி' படத்தில் வடிவேலு மிகவும் வித்தியாசமாக, இதுவரை செய்யாத பாணியில் காமெடி செய்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் வடிவேலு முதல்முறையாக ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதலில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வடிவேலு தயங்கியதாகவும், ஆனால் காமெடியுடன் கலந்த ஆக்ஷன் காட்சிகளில் நடித்த ஜாக்கிசான் படங்களை இயக்குனர் சுட்டிக்காட்டியதும் வடிவேலு ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வித்யாசாகர் இசையமைக்கும் இந்த படத்திற்கு பால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவும், வி.டி.விஜயன் படத்தொகுப்பும் செய்கிறார். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment