↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி மும்பையில் இருந்து வெளிவரும் ஒரு செய்தி நிறுவனம் நடிகை சன்னிலியோன் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் அந்த செய்தி 'முட்டாள்கள் தினத்திற்காக வெளியிடப்பட்டது என்று கூறப்பட்டாலும் இந்த பரபரப்பை போக்க சன்னிலியோன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த செய்தியை மறுத்து விளக்கம் அளித்தார்.
தற்போது 'லீலா' என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு, அந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி இருக்கும் சன்னிலியோன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது, தான் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு இது சரியான நேரமில்லை என்று கூறியுள்ளார். தனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் விருப்பம் என்றாலும் தான் மனதளவிலும், உடலளவிலும் குழந்தை பெறுவதற்கு இன்னும் தயாராகவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சன்னிலியோன் தனது கணவர் டேனியல் வெபர் (Daniel Weber) தற்போது இந்தி மொழியை கற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அவர் இந்தி படங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment