↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடிகர் ரஜினியை, திடீரென நேற்று காலை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சந்தித்துப் பேசினார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, ரஜினி மீது கடுமையான விமர்சனங்களையும் கிளப்பி இருக்கிறது.
'லிங்கா' படப்பிடிப்பு தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, பெங்களூரு, மைசூரு என முகாமிட்டிருந்த நடிகர் ரஜினி, கடந்த 10 நாட்களுக்கு முன், சென்னை திரும்பினார்.
அதன்பின், தொடர்ச்சியாக சென்னையில் தங்கியிருந்து அவர், 'லிங்கா' பட ரிலீஸ் தொடர்பாக பலரையும் சந்தித்து பேசி, அவர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

ஆர்வமாக பேசி...: இதற்கிடையில் அரசியல்வாதிகள் பலரும் தொடர்ந்து அவரை சந்தித்து வருகின்றனர். காங்கிரஸ், பா.ஜ., - தி.மு.க., என பல தரப்பிலும் சந்திப்புகள் நடக்கின்றன.
அனைவரும் அரசியல் தொடர்பாக பேச, ரஜினியும் அவர்களிடம் ஆர்வமாக பேசி, அனுப்புகிறார். ஆனால், யாரிடமும் அவர் அரசியலில் ஈடுபடுவது குறித்து, எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால், அவர் மீது பல கட்சியினரும் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து, அரசியல் வட்டாரங்களில் கூறியதாவது: நடிகர் ரஜினி, கடந்த ?? ஆண்டுகளுக்கும் மேலாக இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார். தற்போது 'லிங்கா' படம்
ரிலீசாகப் போகிறது என்றதும், ரஜினி அரசியலுக்கு வரப் போவதாக செய்திகள் கசிய விடப்படுகின்றன.

நட்பு அடிப்படையில்...: கடந்த ஓராண்டுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி, ரஜினியை பா.ஜ., பக்கம் கொண்டு வர வேண்டும் என, விருப்பப்பட்டார். அந்த நோக்கத்தில் தான், ரஜினியை வீடு தேடிச் சென்று பார்த்தார். ஆனால், ரஜினி, அரசியலுக்கு வர, பிடிகொடுக்கவில்லை என்றதும், நட்பு அடிப்படையில் அவரை சென்று பார்த்ததாக சொல்லிவிட்டு, அமைதியாகிவிட்டார். அதன்பின் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெரு வெற்றி பெற்றதும், இது நாள் வரையில், ரஜினி பற்றி மோடி எந்த அக்கறையும் கொள்ளவில்லை. ஆனால், தமிழகத்தில், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைதானதும் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, பா.ஜ.,வுக்கு ரஜினியை அழைத்து வரவேண்டும் என, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தன்னிச்சையாக விரும்பினார். ரஜினி, வழக்கம் போல பிடி கொடுக்கவில்லை.

முதல் ஆளாக கடிதம் : ஆனால், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, சென்னைக்கு வந்த ஜெயலலிதாவை வரவேற்றும், வாழ்த்து சொல்லியும், முதல் ஆளாக கடிதம் அனுப்பினார் ரஜினி.
இதனால், ரஜினி மீது, மொத்த பா.ஜ., தரப்பினரும் அப்செட் ஆனார்கள். பா.ஜ.,வுக்கு தலையையும், அ.தி.மு.க.,வுக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கும் ரஜினியிடம், பா.ஜ., தரப்பு உஷாராக இருக்க வேண்டும் என, ஒதுங்கினர். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போதே, காங்கிரசின் கராத்தே தியாகராஜனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் சாக்கில், அவரிடமும் பேசி, தான் காங்கிரசுக்கும் ஆதரவாளன் தான் என காட்டினார் ரஜினி. இந்நிலையில், நேற்று காலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை வீட்டுக்கு வரவழைத்து, பேசினார் ரஜினி.

புராணம் பாடுவதில்லை : ப.சிதம்பரம், இலக்கியத்தை மையமாக வைத்து ஆரம்பித்திருக்கும் 'எழுத்து அறக்கட்டளை'யின் நிகழ்ச்சிக்கு, ரஜினியை அழைக்கத்தான், கார்த்தி சிதம்பரம் போனார். என்றாலும், இருவரும் வெகுநேரம் அரசியல் பேசியிருக்கின்றனர்.

இதுவும் தமிழக பா.ஜ., தரப்புக்குத் தெரிய வர, அவர்கள் ரஜினியின் நடவடிக்கைகள் மீது கடும் எரிச்சல் அடைந்திருக்கின்றனர். இனி எக்காரணம் கொண்டும் ரஜினி புராணம் பாடுவதில்லை என்ற முடிவுக்கும் வந்திருக்கின்றனர். இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top