↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

காரைக்குடி அருகிலுள்ள எஸ்.ஆர்.பட்டினம் கிராமம்.எஸ்.ஆர்.பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் கண்ணகி தம்பதி.

ஆறுமுகம் 40 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக பிரான்சுக்கு போனவர். உழைப்பால் உயர்ந்து அங்கு குடியுரிமை பெறுமளவுக்கு தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டார்.
ஆறுமுகத்துக்கு 2 மகன்கள், ஒரு மகள். இளைய மகனான கவுதமன் ஐரோப்பிய நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராகவும்,மொழி பெயர்ப்பாளராகவும் இருக்கிறார்.

இவருக்கும் அறந்தாங்கியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன் மகள் பானுப்பிரியாவுக்கும் எஸ்.ஆர்.பட்டினத்தில் நாளை திருமணம் நடக்கவிருக்கிறது.
நிச்சயதார்த்தையும், திருமணத்தையும் வித்தியாசமாக நடத்த திட்டமிட்ட கவுதமன் குடும்பத்தினர், இதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

இன்று காலை ஹெலிகாப்டரில் அறந்தாங்கி செல்கிறார் புதுமாப்பிள்ளை. அங்கு நிச்சயதார்த்தம் நடக்கும்போது ஹெலிகாப்டரில் இருந்து சுமார் 100 கிலோ மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிச்சயதார்த்தம் முடிந்ததும் மணப் பெண்ணை அழைத்துக் கொண்டு ஹெலிகாப்டரிலேயே எஸ்.ஆர்.பட்டினம் வருகிறார் கவுதமன்.

நாளை காலை திருமணம் நடக்கும்போதும் ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதியர் ஹெலிகாப்டரில் ஒரு மணி நேரம் ரைடு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திருமணத்துக்காக சென்னையைச் சேர்ந்த க்ளைடர் ஏவியேஷன் நிறுவனம் மூலம் ஹெலிகாப்டர் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது.
இதற்கான வாடகை மட்டுமே ரூ.15 லட்சம் . அதுமட்டுமின்றி, ஒருமுறை மேலேழும்பி பறப்பதற்கு ரூ.50 ஆயிரம் கட்டணம். ஹெலி காப்டர் இறங்குவதற்காக அறந்தாங்கியிலும் எஸ்.ஆர்.பட்டினத்திலும் ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top