↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டின் அடுத்த வர்ஷனான "ஆண்ட்ராய்டு லாலிபாப்" என்னும் புதிய வர்ஷனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய இயங்கு தளம் (ஒ.எஸ்) அனைத்து வகையான சாதனங்களிலும் சிறப்பான அனுபவத்தைத் தரும் வல்லமை உடையது என கூகுள் உறுதிபட கூறியுள்ளது.
இந்த புதிய வர்ஷனில் நமக்கு வரும் நோட்டிஃபிகேஷனை கட்டுப்படுத்தும் அற்புதமான வசதி உள்ளது. நாம் போனைப் பயன்படுத்தும்போது நமக்கு ஏதாவது கால் வந்தால் இடையூறாகத் தோன்றாத அளவிற்கு இந்த வர்ஷன் அமைக்கப்பட்டுள்ளது. நோட்டிஃபிகேஷன் யாரிடம் இருந்து வருகின்றது என்பதைப் பொறுத்து அனைத்து நோட்டிபிஷேன்கள் அனைத்தும் ரேங்கிங் செய்யும் வசதியும் இதில் உள்ளது.
கூடுதலாக 90 நிமிடங்கள் பேட்டரியை சேமிப்பு செய்யும் இதில் உள்ளது. பாதுகாப்புக்காக என்க்ரிப்ஷன் வசதி இருக்கிறது. மேலும் நம்முடைய போனை நம்மை தவிர வேறு சிலரும் பயன்படுத்தலம். அதற்கென கெஸ்ட் யூசர் என்ற வசதி இந்த புதிய வர்ஷனில் உள்ளது. நமது போனை மற்றவர்களுக்கு பயன்படுத்த கொடுக்கலாம். ஆனால் அவர்கள் கெஸ்ட் யூசர் மூலம் நமது போனை மட்டுமே பயன்படுத்த முடியும், அதில் உள்ள தகவல்களை அவர்கள் பார்க்க முடியாது. மேலும் இந்த புதிய வர்ஷனில் தமிழ் உள்ளிட்ட 68 மொழிகள் இருப்பதால் அனனத்து மொழியினர்களும் பயன்படுத்தலாம்
ஆண்ட்ராய்டு 1.5 முதல் தொடங்கி கப்பேக், டோனெட், சாண்ட்விச், ஜெல்லிபீன், கிட்காட் என அனைத்து வர்ஷன்களும் இளைஞர்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளதால் இந்த புதிய வர்ஷனுகூம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த லாலிபாப் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய வர்ஷனுக்காக கூகுளின் தலைமை அலுவலகத்தின் முன் லாலிபாப் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment