நமது தளத்தில் நேற்று வெளியான, சினிமா ஹீரோக்களின் போலி சமூக அக்கறை – கத்தியை முன் வைத்து கட்டுரைக்கு சிலர் எதிர்வினை புரிந்துள்ளனர். இந்த எதிர்வினைகளுக்கு பதில் சொல்ல வேண்டியது நமது கடமை. எதிர்வினை புரிந்தவர்களின் கேள்வியை, விளக்கத்தை முன் வைத்து பதில் சொல்வதே சரியாகும்.
1. காசுவாங்கிக் கொண்டு கொக்கோ கோலா விளம்பரத்தில் நடித்த விஜய்க்கு விவசாயிகள் பிரச்சனை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறதென்று பரவலாக ஸ்டேடசுகளை பார்க்க முடிகிறது. அவரு சொல்லித்தான் கொக்கொ கோலா வாங்கி குடிச்சீங்கன்னா, இன்னக்கி அவரு விவசாயம் பார்க்க சொல்றாருன்னா போயி வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு நிலத்துல இறங்கி விவசாயம் பாக்க வேண்டியது தானே. விஜய் சொன்னால்தான் கேட்பீர்கள் என்றால், தமிழன் படத்தில் அவர் சட்டம் படிக்க சொன்னார், நீங்கள் சட்டம் படித்தீர்களா இல்லை, கில்லி படத்தில் அவர் கபடி விளையாண்டார் என்பதால் கிரிக்கெட்டை விட்டுவிட்டு கபடியை வளர்த்தீர்களா?
இது ஒரு வாசகரின் எதிர்வினை. இந்த வாசகர் இங்க சொல்லிருப்பதைதான் நாங்களும் கட்டுரையில் சொல்லியிருக்கோம். continue read
0 comments:
Post a Comment