↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கத்தி படம் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக அடித்தட்டு மக்கள் மற்றும் விவசாய நண்பர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் நேற்று கோவையில் பிரபல கல்லூரி ஒன்றிற்கு சென்ற விஜய் அங்கு மாணவர்கள் முன்னிலையில் சூப்பர் ஸ்பீச் ஒன்றை கொடுத்தார்.
இதில் ’கத்தி, என்னோட கேரியரில் ரொம்ப ரொம்ப முக்கியமான படம். உணவு, உடை, இருப்பிடம் ஆகிய முக்கியமானவற்றில் முதன்முதலாக உள்ள உணவைத் தருகிற விவசாயப் பிரச்சினையை சொன்னதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.கத்தி படத்தில் நச்சுன்னு ஒரே வரியில் சொன்ன டயலாக் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதாவது, "நாம் பசிக்கு சாப்பிட்டது போக மீதி இருக்கிற உணவு அடுத்தவங்களுக்கு". நாளைக்கு சேர்த்து வைப்பதை விட ஏழைகளுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணினா குறைந்தா போய்விடப் போகிறோம்.
ஓர் ஊரில் நிறைய மருத்துவமனை இருந்தால் அந்த ஊரில் ஆரோக்கியம் குறைவாக இருக்குன்னு அர்த்தம். கடன் அள்ளி அள்ளி கொடுத்தால் ஏழைகள் அந்த ஊரில் அதிகம் இருக்காங்கனு அர்த்தம். எப்போது இந்த நலத் திட்டங்கள் கொடுப்பது நிறுத்தப்படுகிறதோ அன்றுதான் இந்தியா வல்லரசு நாடாகும்’ என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment