வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்பிரமுகர்கள் நால்வர் மீதான விசாரணை இறுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு, கருப்பு பணம் தொடர்பான வழக்கில், இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், மூன்று தொழிலதிபர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், படிப்படியாக கருப்பு பணம் வைத்துள்ள அனைவர் பெயர்களையும் வெளிக்கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அடுத்த பட்டியல் வெளியாகும்போது காங்கிரஸ் கட்சி பெரும் அதிர்ச்சியை சந்திக்கும் என்று தெரிவித்தார்.
அதேபோலத்தான் மத்திய அரசின் நடவடிக்கைகளும் உள்ளன. சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் கருப்பு பணத்தை சேமித்து வைத்துள்ள, காங்கிரஸ்காரர்கள் நால்வர் மீது பிடி இறுகியுள்ளது. அதில் இருவர், மகாராஷ்டிராவை சேர்ந்த முன்னணி அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்களாகும்.
இதேபோல மத்திய முன்னாள் அமைச்சர் ஒருவரும், உத்தர பிரதேச முன்னாள் எம்.பியும் இந்த பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகுவிரைவில் இவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “கருப்பு பணம் வைத்திருப்போர் பெயர் வெளியானால் அதற்கு அந்த நபர்தான் அதிர்ச்சியடைய வேண்டுமே தவிர காங்கிரஸ் அதிர்ச்சியடைய தேவையில்லை” என்றார். Continue to read
0 comments:
Post a Comment