ரஜினியின் சாதனைகள் உடைக்க முடியாதவையோ, உடைக்கக் கூடாதவையோ அல்ல.. தாராளமாக யாரும் அவரது சாதனைகளைத் தாண்டி சாதிக்கலாம்.
ஆனால் படம் வெளியான முதல் நாளே நான் ரஜினியின் சாதனையைத் தாண்டி விட்டேன் என்று கூப்பாடு போடுவதைப் போன்ற அரைவேக்காட்டுத்தனம் எதுவுமில்லை.
எந்திரன் படத்தின் சாதனையை முறியடித்துவிட்டது விஜய் படம் என்று இன்றல்ல.. வேலாயுதம் படம் வெளியானதிலிருந்து பிரஸ் மீட் வைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வேலாயுதம் போய், நண்பன் வந்தது. அப்போதும் அவர்கள் எந்திரன் சாதனையைத்தான் தாண்டினார்கள். வேலாயுதம் சாதித்தது என்னவென்று சொல்லவே இல்லை.
நண்பன் படத்தின் 100 கோடியை எண்ணி முடித்துவிட்டார்களா? என இதே பகுதியில் எழுதிய கட்டுரை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. கடைசியில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மகா கடனாளியாக ஏனாம் பக்கத்தில் அனாதையாக செத்துக் கிடந்தார் என்ற செய்திதான் வந்தது!
அடுத்து வந்த துப்பாக்கிக்கும் இப்படித்தான் எந்திரன் சாதனையை ‘முறியடித்தார்கள்’. துப்பாக்கி போய், ஜில்லா வந்தது. அந்தப் படமும் எந்திரனைத்தான் ‘முந்தியது’.
அதான் வேலாயுதத்திலேயே முந்திவிட்டீர்களே.. அப்புறம் எதற்கு மீண்டும் எந்திரன்? வேலாயுதம் சாதனையை நண்பனும், நண்பன் சாதனையை துப்பாக்கியும், துப்பாக்கி சாதனையை ஜில்லாவும், ஜில்லா சாதனையை இந்த கத்தியுமல்லவா முறியடித்திருக்க வேண்டும்? Continue to read
0 comments:
Post a Comment