குஜராத் மாநிலத்தில் தாயார் ஒருவர் பெற்ற மகளின் உயிரை காப்பாற்ற முதலையுடன் போராடியது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. |
குஜராத்தில் பட்ரா நகர் அருகே உள்ள திகரியமுபாரக் கிராமத்தில் வசித்து வரும் திவாலி என்பவருக்கு காந்தா வாங்கர் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் தங்கள் வீட்டிற்கு அருகே உள்ள விஷ்வமித்ரி ஆற்றில் காந்தா துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் இருந்த முதலை ஒன்ரு காந்தாவின் காலை கவ்வி ஆற்றுக்குள் இழுத்து செல்ல முயன்றுள்ளது. இதனால் மரண பயமடைந்த காந்தா பயத்தில் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று அலறியுள்ளார். இந்த அலறலை கேட்ட அவரது தாய் அங்கு ஓடிவந்துள்ளார். பின்னர் மகளின் கைகளை உறுதியாக பிடித்து கொண்ட அவர், அருகில் கிடந்த கட்டையை எடுத்து முதலையை பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன முதலை காந்தாவின் காலை விட்டுவிட்டு தண்ணீருக்குள் தப்பி சென்றுள்ளது. இதையடுத்து திவாலி தனது மகள் காந்தாவை உடனடியாக மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். தற்போது காந்தாவின் உடல்நிலை தேறிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
குஜராத்தில் பெற்ற மகளை கவ்வி இழுத்து சென்ற முதலை: போராடி மீட்ட வீரத்தாய்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment