கடும் விமர்சனங்கள், சர்ச்சைகள் இருந்தாலும் பாலிவுட்டில் இப்போது அதிக படங்களில் நடித்துக் கொண்டிருப்பது சன்னி லியோன்தான். சமீபத்தில்
வெளிவந்த ஏக் பஹேலி லீலா கலெக்ஷனை அள்ளிக் கொண்டிருக்கிறது.
அடுத்து வர இருக்கிறது மஸ்திஸாதே. இது செக்ஸ் காமெடி படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. பிரபல பத்திரிகையாளர் பிரதீஷ் நந்தி தயாரிக்கிறார். இதில் 2 வேடங்களில் நடிக்கிறார் சன்னி. அடுத்து டினா அண்ட் லோலா. இதில் சன்னியும் கன்னட நடிகை கரீஷ்மா டானுவும் போட்டி போட்டு கவர்ச்சியாக நடித்து வருகிறார்கள். ஹாலிவுட் படமான சார்லீஸ் ஏஞ்சல் போன்று இது காமெடி கிளாமர் படம். சன்னி பாய்ந்து பாய்ந்து சண்டையெல்லாம் போடுகிறார்.
குச் குச் லோச்சா ஹை என்கிற படத்தின் டைட்டிலே செம கிக்கா இருக்குதுல்ல. இதுவும் சன்னி நடிக்கிற படம்தான். ஒரு பெரிய வயதான தொழில் அதிபருக்கு ஒரு கவர்ச்சி நடிகை மீது ஆசை. அவரை நெருங்க தொழில் அதிபர் போடும் திட்டங்களும், நடிகை அவருக்கு தண்ணி காட்டுவதும்தான் கதை. தமிழில் கமல் நடித்த மீண்டும் கோகிலாவை கொஞ்சம் அப்படி இப்படி எடுத்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு படம் இது.
இவைகள் தவிர இன்னும் தலைப்பு வைக்காத 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 2016 இறுதி வரை சன்னியின் கால்ஷீட் டயரி நிரம்பி வழிகிறது. இதனால் பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் சன்னி மீது செம காண்டில் இருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment