பெரும்பாலான படங்களில் ஹீரோயின்கள் தேவதைகளாகவே காட்டப்படுகின்றனர். கே.பாலசந்தர், பாலுமகேந்திரா, பாலா என ஒரு சில இயக்குனர்களே அவர்களை யதார்த்த கதாபாத்திரங்களாக உலவவிட்டுள்ளனர்.
டோலிவுட்டில் ஹீரோயின்களுக்கு மவுசு இன்னும் அதிகம். காஸ்டியூம் முதல் சிகை அலங்காரம் வரை அவர்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு நடக்கும். ஆனால் இந்த கமர்ஷியல் பூச்சுக்குள்ளும் ஹீரோயினையும் சாதாரண பெண்ணாகவே கதைகளில் சித்தரிப்பவர் இயக்குனர் திரிவிக்ரம். தற்போது அவர் இயக்கியுள்ள புதிய படத்தில் சமந்தா நீரிழிவு நோயாளியாக நடித்திருக்கிறார். கனவு ஹீரோயின் என்று வர்ணிக்கப்படும் சமந்தாவை நீரிழிவு நோயாளியாக காட்டலாமா என்று திரிவிக்ரமிடம் கேட்டபோது கோபப்பட்டார்.
அவர் கூறியது:
ஹீரோயின்கள் என்றால் அவர்கள் வானத்திலிருந்து குதித்த தேவதைகள் கிடையாது. சாதாரண மனிதர்களுக்கு உள்ள பிரச்னைகள் அவர்களுக்கும் உள்ளது. எனவேதான் எனது படத்தில சமந்தா கதாபாத்திரத்தை நீரிழிவு நோயாளியாக சித்தரித்திருக்கிறேன். பொதுவாக ஹீரோயின்களுக்கு இதுபோன்ற பிரச்னை இருக்கிறதென்றால் மக்கள் ஏற்பதில்லை. ஆனால் நீரிழிவு என்பது இந்த காலத்தில் பொதுப்பிரச்னையாக உள்ளது. பிரபலங்கள் சிலரும் இதுபோன்ற நீரிழிவுக்கு ஆளாகி இருப்பது அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.
0 comments:
Post a Comment