↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த சில நாட்களாக நெல்லை அருகே மாணவனுடன் காதல் வயப்பட்டு, ஊரை விட்டுச் சென்ற ஆசிரியரைப் பற்றித் தான் ஊடகங்கள், சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே காலாங்கரையைச் சேர்ந்தவர் கேசரி மகள் கோதை லட்சுமி என்ற பிரியா (23). எம்.எஸ்சி பட்டதாரியான பிரியா, தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். 

அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவருடன் பிரியாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. இருவரின் காதல் குறித்து விபரமறிந்த பள்ளி நிர்வாகம் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி இருவரும் திடீரென மாயமானார்கள். இதுகுறித்து செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் காவல் நிலையங்களில் இருதரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை வைத்து பல்வேறு வதந்திகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. முதலில் இந்த சம்பவத்தில் சம்பந்தமில்லாத வெளிமாநில ஆசிரியை மற்றும் மாணவரின் போட்டோ வெளியாகி, இவர்கள் தான் செங்கோட்டைக்காரர்கள் என செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து தலைமறைவான ஆசிரியையும், மாணவரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அதுவும் மிகவும் பழைய செய்தி என பின்னர் உறுதியானது. இவ்வாறு வதந்தி பரப்புபவர்களுக்கு அவல் போல் இந்த விவகாரம் சிக்கியுள்ளது. 

ஆனால், இதில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு சமாச்சாரம் ஆசிரியர் - மாணவர் உறவு. மாதா, பிதா, குரு, தெய்வம் என தாய்க்கு அடுத்த இடத்தில் மற்றொரு தாயாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் இவ்வாறு அத்துமீறுவது சமூகத்தின் அவலநிலையையே காட்டுகிறது. 


கல்வியோடு, ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டியவர்கள் ஆசிரியர்கள். ஆனால், அவர்களே மாணவர்களிடம் முறை தவறி நடக்கத் தொடங்கினால் எதிர்கால இந்தியாவின் தூண்களின் நிலை கேள்விக் குறியாகி விடுமே. வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் நடந்து வந்த இத்தகைய சம்பவங்கள் தற்போது தமிழகத்திலும் நடந்திருப்பது வேதனைக்குரிய விசயமே. இது பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய தவறுகளுக்கு முதல்காரணமாக பெரும்பாலானவர்கள் குற்றம் சாட்டுவது சினிமாவைத் தான். சினிமாக்களில் காட்டப்படும் ஆசிரியர் - மாணவர் காதலை நிஜ உலகில் வாழ நினைத்து தான் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர் அஞ்சும் நிலை ஏற்படுகிறது. 


ஆனால், அனைத்து ஆசிரியர்களும் மோசமானவர்கள் அல்ல. ஆசிரியர் பணியைப் புனிதமானதாகக் கருதி சேவை மனப்பான்மையுடன் செய்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அதேபோல், காதல் என்பதும் தனிமனித விருப்பம். ஆனால், அது சமூக அமைதிக்கு கூறு விளைவிக்காததாக பார்த்துக் கொள்வதும் அனைவரது கடமை ஆகும். 

கூட்டுக் குடும்பங்கள் குறைத்து, தனிக்குடும்பங்கள் அதிகரித்து விட்ட சமூகத்தில், பொருளாதார தேவைகளுக்காக பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால், பெற்றோர் - குழந்தைகள் மத்தியில் இடைவெளி அதிகரிக்கிறது. எனவே, அன்பிற்காக ஏங்கும் குழந்தைகள் தன்னை விட வயதில் மூத்த ஆசிரியர்களுடன் காதல் வயப்படுகின்றனர் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.


 எனவே குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். பருவ வயதில் அவர்களை கண்காணித்து பக்குவமாக வாழ்க்கையை புரியவையுங்கள் என பெற்றோருக்கு அவர்கள் அறிவுரை கூறுகின்றனர். அதேபோல், ஆசிரியர் -மாணவர்களுக்கிடையே ஏற்படும் இது போன்ற பொருந்தாக் காதல்கள் குறித்த விழிப்புணர்வும் இருதரப்பிற்கும் எடுத்துக் கூறப்பட வேண்டும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top