↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
விருதுகளுக்கென்றே சில படங்களை எடுப்பார்கள். அவற்றின் நோக்கம் விருதுகள் மட்டுமே. பல்வேறு திரைப்பட விழாக்களைச் சுற்றி வரும் அந்தப் படம், கடைசியில் ரிலீசாகமலே கூடப் போகலாம், அக்ரஹாரத்தில் கழுதைகள் மாதிரி. காக்கா முட்டை படமும் கூட விருதுகளை குறிவைத்து எடுக்கப்பட்ட படம்தான்.
தனுஷ், வெற்றி மாறன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள காக்கா முட்டை படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு விருதுகளைப் பெற்று வருகிறது.
இரண்டு சிறுவர்களை மையப்படுத்திய கதையாக உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு டொராண்டோ சர்வேதச திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது.
அதைத் தொடர்ந்து இரண்டு தேசிய விருதுகளையும் இப்படம் பெற்றுள்ளது. அப்போதுதான் படம் குறித்து பெரிய அளவில் வெளியில் தெரிந்தது.
இந்நிலையில், இந்த படம் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் 3 விருதுகளைப் பெற்றுள்ளது காக்கா முட்டை. சிறந்த திரைப்படத்திற்கான விருது, பார்வையாளர்களின் தேர்வு, சிறந்த நடிகர்களுக்கான கிராண்ட் ஜூரி விருது என இந்த மூன்று விருதுகளையும் காக்கா முட்டை படம் வென்றுள்ளது. இது படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது. படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகிறது.
Home
»
cinema
»
cinema.tamil
»
dhanush
» வெளிவரும் முன்பே சர்வதேச விருதுகளைக் குவிக்கும் காக்கா முட்டை!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment