↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஹனோவர்: ஜெர்மனி தொழிலதிபர்கள் மத்தியில் தனது மேக் இன் இந்தியா திட்டம் குறித்துப் பேசினார் பிரதமர் மோடி. ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி, ஹனோவர் பகுதியில் நடந்த மிகப்பெரிய வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்தியாவில் தொழில் துவங்க சாதகமாக இருக்கும் தன்மைக்களை முதலீட்டாளர்கள், தொழில்துறை முனைவர்கள் மத்தியில் அங்கு விவரித்தார் மோடி. இதன் மூலம் பல முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டனர்.
இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைத் துவங்குவதற்கான வழிமுறைகள் எளிதாக்கியுள்ளோம் என்று மோடி ஹனோவர் மெஸ்ஸி கூட்டத்தில் கூறினார். மேலும் இந்திய சந்தையில் நிறுவனங்களின் முதலீடு, தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதில் இருக்கும் தடைகள் மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் துவங்கப்படும் நிறுவனங்களுக்கு நிலையான மற்றும் தெளிவான வரி விதிப்புத் திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாகவும் மோடி இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
த்தகைய சிறப்பு வாய்ந்த கூட்டத்தில் மேக் இன் இந்தியா சிங்கத்தையும், திட்டத்தை வெளியீட நான் மகிழ்ச்சிகொள்கிறேன் என்று கூறினார் மோடி.
மேலும் இக்கூட்டம் முடிந்த பின் மோடி ஜெர்மனியின் 14 முக்கியத் தொழிலதிபர்களைத் தனிப்பட்ட முறையில் வட்டமேஜை மாநாட்டில் சந்தித்து, இந்தியாவில் வர்த்தகத் துவக்கம் மற்றும் விரிவாக்கம் பற்றிய விவதங்களை மேற்கொண்டார்.
ஜெர்மனியில் வசித்து வரும் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்துப் பேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளர்.
ஏப்ரல் 9ஆம் தேதி பிரதமர் மோடி பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணமாக 9 நாள் சென்றுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment