இங்கிலாந்தில் வரும் மே மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அந்நாட்டு பிரதமரான டேவிட் கேமரூன் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கேமரூன் நேற்று மான்செஸ்டர் நகரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது ரீமா என்ற 10 வயதான இந்திய வம்சாவளி சிறுமி கேமரூனிடம், உங்களைத் தவிர்த்து வேறு ஒருவர் பிரதமராக வேண்டும் என்றால் நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன் அவரை தேர்ந்தெடுப்பீர்கள்? என்று கேட்டு திகைக்க வைத்துள்ளாள்.
இந்த கேள்வியால் சில நிமிடங்கள் செயலிழந்து போன பிரதமர் கேமரூன், இந்த கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினமானது.
இந்த கேள்விக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை. காரணம் நாட்டில் நிறைய பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வேறொருவர் பிரதமராக வர வேண்டும் என்று நினைத்திருந்தால், நான் இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டேன் என்று பதிலளித்துள்ளார்.
மேலும், பிரச்சாரம் முடிந்து கேமரூன் கிளம்பும்போது, தேர்தல் பிரச்சாரத்தின் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளிலேயே தலை சிறந்த கேள்வி இதுதான் என சிறுமி ரீமாவின் சாமர்த்தியத்தைப் பாரட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment