↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
யுவராஜ் தயாளன் இயக்கத்தில், வடிவேலு நடித்துள்ள படம் எலி. இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு. அதில் ஒரு வேடத்தில் திருடனாக நடிக்கிறார் வடிவேலு.
திருடி விட்டு எலி மண்ணுக்குள் சென்று மறைந்து கொள்வது போன்று தலைமறைவாகிக்கொண்டு போலீசுக்கு டேக்கா கொடுக்கும் வேடத்தில் அவர் நடித்துள்ளார்.
இப்படத்துக்காக கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு ஒரு பெருந்திரளுடன் வடிவேலு பட்டினிப் போராட்டம் நடத்துவது போன்ற ஒரு காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
அதாவது இரவு நேரத்தில் விமானங்கள் பெரும் சத்தத்துடன் செல்வதால் அந்த ஏரியா மக்கள் சரியாக தூங்குவதில்லை. இப்படி மக்கள் தூங்காமல் இருப்பதால் வடிவேலுவால் திருட்டு தொழில் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படுமாம்.
அதனால், ஊர் சுற்றிக்கொண்டு திரியும் ஒரு கூட்டத்தை பிரியாணி வாங்கித்தருவதாக சொல்லி கலெக்டர் அலுவலகம் எதிரே பட்டினிப் போராட்டம் நடத்துவாராம் வடிவேலு.
அப்போது மக்கள் குடியிருக்கும் பகுதியில் விமான நிலையம் இருப்பதால் இரவு நேரங்களில் விமானங்கள் சத்தத்துடன் வந்து செல்வது அந்த ஏரியா மக்களால் சரியாக தூங்க முடியவே இல்லை.
அதனால் இந்த விமான நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று கோஷமிடுவாராம் வடிவேலு. அதையடுத்து எலி படத்தில் போலீசாக நடித்துள்ள டைரக்டர் ராஜ்கபூர் வந்து அந்த கூட்டத்தை விரட்டியடிப்பாராம்.
இந்த காட்சியில் மைக் பிடித்து சமூக ஆர்வலர் போன்று திருடன் வடிவேலு நடித்துள்ள காட்சி படு காமெடியாக படமாக்கப்பட்டிருக்கிறதாம். அதோடு போலீசுக்கு எதிராக அவர் பேசும் வசனங்களும் ஆரவாரமாக அமைந்துள்ளதாம்.
Home
»
cinema
»
cinema.tamil
»
vishal
» கலெக்டர் அலுவலகம் முன்பு வடிவேலு பட்டினிப் போராட்டம்! எதுக்கு?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment