↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலகின் டாப் 5 மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ஹெச்.டி.சி நிறுவனம்,இந்தியாவில் மொபைல் தயாரிப்பை துவங்க புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான இறுதிக்கட்ட முடிவுகளை அடுத்த5 மாதங்களில் எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. புதன்கிழமை டெல்லியில் இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை வெளியிடும் நிகழ்ச்சியில் ஹெச்டிசி நிறுவனத்தின் உயர்அதிகாரி ஒருவர் அதனைத் தெரிவித்தார்.
இந்தியாவில் தொழிற்சாலை துவங்குவதில் பல தரப்பட்ட கருத்துக்கள் மற்றும் முடிவுகள் உள்ள நிலையில் அடுத்த 4முதல் 5 மாதங்களில் இறுதிக்கட்ட முடிவுகள் எடுக்க உள்ளோம் என இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைமைநிதியியல் அதிகாரி மற்றும் குளோபல் சேல்ஸ் பிரிவின் தலைவரான சியாலின் சாங் தெரிவித்தார்.
தொழிற்சாலை என்றால் உற்பத்தி மட்டும் அல்லாமல் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுடனேஇந்தியாவில் காலத்தடம் பதிக்க உள்ளோம். மேலும் தொழிற்சாலை துவங்குவதில் இந்திய நிறுவனத்தின் துணையை நாடுகிறோம் எனவும் சியாலின் தெரிவித்தார்.
இந்தியாவில் உற்பத்தி துவங்கி வாடிக்கையாளர்கள் கையில் தயாரிப்புகள் கிடைக்கும் வரை எந்த விதமான பிரச்சனையும்இல்லாமல் செயல்படுத்த, புதிய மற்றும் எளிமையான திட்டவடிவங்களை நிர்வாகம் தீட்ட துவங்கியுள்ளது இதன்முடிவுகள் அடுத்த 5 மாதங்களில் தெரியவரும் எனச் சியாலின் கூறினார்.
இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை உருவாக்க மத்திய அரசு பன்னாட்டுநிறுவனங்களுக்குப் பல சலுகைகளுடன் அழைப்பு விடுத்துள்ளது.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் உயர் தலைவர்களைச் சந்தித்த ஐடி மற்றும் டெலிகாம் துறை அமைச்சர் ரவி சங்கர்பிரசாத் இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி கூடங்களை அமைக்க வலியுறுத்தினார்.
இந்திய மொபைல் விற்பனை சந்தையில் 10 சதவீத இடத்தைப் பிடிக்க ஹெச்.டி.சி கடுமையான முயற்சியில்இறங்கியுள்ளது. தற்போது இந் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 6 சதவீதம் மட்டுமே.
நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பான எம்9+ ரகப் போன்களை அறிமுகம்செய்தது. இதன் விலை 52,500 ரூபாயாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment