’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சூரி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரஜினி முருகன்’.
இப்படத்தின் படப்பிடிப்புகள் நேற்றோடு நிறவடைந்து விட்டன . இதுகுறித்த புகைப்படத்துடன் நேற்று சிவகார்த்திகேயன் ட்விட்டரில் ‘ரஜினி முருகன்’ குழுவுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ‘ரஜினி முருகன்’ நிறைவு பெற்றது. இம்முறை உங்களை உற்சாகப்படுத்த ஒரு பெரிய டீம் வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் ஏப்ரல் 25ம் தேதி என அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏப்ரல் 25ல் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘காக்கி சட்டை’ படத்தில் போலீஸாக ஆக்ஷனில் கலக்கிய சிவகார்த்திகேயன் மீண்டும் காமெடி , சூரி காம்பினேஷன் என களம் இறங்கியுள்ளார்.
0 comments:
Post a Comment